பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணாலம் 13

அதற்கு முன்னும் வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற புலவர் பெருமக்களை நக்கீரர் போற்றிப் புகழ்ந்துள்ளார். i பாரி, பறம்பாண்ட பெருவீரன் ; சிறந்த கொடையா ளன் ; அவன் புகழ் பரவுவது கண்டு அழுக்காறு கொண்டு, அவனே அழிக்க எண்ணிய மூவேந்தர்கள் அவன் பறம் பாண முற்றுகையிட்டனர் ; முற்றுகை பலநாள் நீடித்தது; உள்ளிருப்போர்க்கு உணவுக்குறை யொன்றும் உண்டாக வில்லை எனினும், அரிசி உணவு இல்லாக்குறை யொன்று மட்டு மிருந்தது ; அதைப் பாரியின் நண்பரும் பெரும்புல வரும் ஆய கபிலர் உணர்ந்தார்; பறம்பிற்குள்ளே நெல்ல ரிசி கிடைத்தல் அரிது; அரிசி அரணிற்கு வெளியிலிருந்தே வருதல் வேண்டும்; அதற்கு ஒர் உபாயங் கண்டார்; பறம்பு மலைக் கிள்ளைகளைப் பிடித்துப் பழக்கினர்; கோட்டையைக் கடந்து வெகுதொலைவு சென்று, ஆங்குள்ள வயல்களினின் மறும் கதிர்களே வாயிற் கெளவிக்கொணருமாறு பணித்தார்; அவையும் அவ்வாறே செய்தன; அகவாழ் வீரர் அரிசி உணவு பெற்றனர்; அதனல் ஆற்றல் மிகுந்து விளங்கிய அவர்கள் துணே யால், பாரி, பறம்பாணக் கடந்து வெளிப் போந்து வேந்தரை வென்று துரத்தினன். இவ்வாறு பாரி பெற்ற வெற்றிக்குக் காரணமாய கபிலரின் செய்கையைக் கேட்ட நக்கீரர் அவர்கம் இவ்வரும்பெரும் செயலைப் போற்றினர். அவர் செயலைப் போற்றியதோடு அவரையும், 'உலகெலாம் பரவிய புகழுடையார் ; பலரும் புகழும் புக ழுடையார்; வாய்மை வழுவாப் பெரும்புலவன்,” என்றெல் லாம் போற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ளார்;

' உலகுடன் திரிதரும் பலர்புகழ் கல்விசை

வாய்மொழிக் கபிலன் சூழச், சேய் கின்று செழும்செய் கெல்லின் விளைகதிர் கொண்டு, தடத்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, யாண்டுபல கழிய வேண்டுவயின் பிழையாது, தாளிஉேக் கடந்து, வாளமர் உழக்கி எந்து கோட்டு யானை வேந்தர் ஒட்டிய கடும்பரிப்பு விக் கைவண் பாரி. (அகம். எஅ)