பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நக் சேர்

பெருமக்கள் நக்கீரர் காலத்தவராவர் என்று கொள்ளலாம். நக்கீரர், கபிலர், பாணர் முதலியோரைக் கொண்ட தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராவர் ; சங்கப் பலகைமீது கபிலரும், பரணரும் அமர்வதற்குமுன் அமர்ந்தவர் நக்கீரரே எனப் புராணங்கள் கூறுகின்றன எனினும், புலவர்கள் பாடிய சங்கச் செய்யுட்களைத் துணைகொண்டு நோக்கியவழி நக் ாேர், பரணர் கபிலராய பெரும்புலவர்கள் காலத்தில் வாழ்ந் தவரல்லர்; அவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த வரே என்ற முடிடே கொள்ளக் கிடக்கிறது. நக்கீரர், கபில் ரைப் பாராட்டியுள்ளார் என்பதும் ஈண்டு கினைவூட்டற் பாலது ; ஈக்கீரர் பாராட்டிய நெடுஞ்செழியன், பரணர் பாராட்டிய செங்குட்டுவனுக்கு ஒரு தலைமுறை பிற்பட்ட

வன் என்றே அறிஞர்கள் கருதுவர்.