பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீசர் பாராட்டிய அரசர்கள் 39.

ஆதலாலும், மாருக, அவன் சோர்க்குரிய கருவூரை முற்றி அழித்தான்் எனப்பலரும் கூறியிருப்பதாலும், கூடல்நகரில் நடைபெற்ற இப்போரில் பெற்ற வெற்றி கண்டு சேர அரசன் மகிழ்ந்தான்் என்று கொள்வதிலும், ஆங்கே தன் பகைவன் ஒருவன் பெற்ற பெருந்தோல்வி கண்டே மகிழ்ந்தனன் எனக்கொள்வதே நேரிதாம் ஆதலாலும், பழையன், கிள்ளிவளவன் இருவரில், கிள்ளி வளவனே சேரர்களின் பெரும்பகைவனுய்க் காணப்படு. கின்றனன் ஆதலாலும், பழையன் படைத்தலைவனே அன்றிப் பேராசனல்லன் ஆதலாலும், கிள்ளிவளவன், பழையனைப் போரில் சாய்த்து மன்னர் ஊர் கொண். டான்' எனக் கூறுவது பொருந்தாது ஆதலாலும், பழையன், தன் தலைநகர் வந்து தங்கிய கிள்ளிவளவனேச் சாய்த்து மன்னனுகிய அவன் ஊரைக் கைக்கொண்டான் ; அதுகண்டு, கிள்ளிவளவன் பகைவனுகிய சோன் மகிழ்க் தான்் எனக்கொள்வது பொருந்துவதாகத் தோன்று. வதாலும் அவ்வாறு கொள்வாரும் உளர். அவ்வாறு கொண்டால், அது கிள்ளிவளவன் தோல்வியைக் குறிப்ப தாகும்.

தித்தன், கித்தன் வெளியன், மாவண் தித்தன் என்று அழைக்கப் பெறுவானெரு குறுகில மன்னன் உறையூரில் வாழ்ந்திருந்தான்்; நாள்தோறும் அரசவையில் இருந்து வருவார்க்குப் பொன்னேயும் பொருளையும் வாரி வழங்கும் வள்ளன்மை உடையவன்; பெரிய வீரன்; இவனே வெல்லக்கருதி, பாணன் என்ற பெரிய மல்லன் ஒருவனே யும் துணைகொண்டு வந்த கட்டி என்பவன், இவன் நாளோ லக்கச் சிறப்பைக்கேட்டு அஞ்சி ஒடிவிட்டான் என்று தித்தனின் வெற்றிச்சிறப்பை ஒரு புலவர் விளக்குவார். ஐயை என்ற பெயர் கொண்டு, கற்பும் பொற்பும் பொருங்’ திய மகள் ஒருத்தியைத் தித்தன் பெற்றிருந்தான்். கித்தன் உறந்தை காவற்காடுகளால் சூழ்ந்து பெறுதற்கு அருமை உடையது; வெண்ணெல் வயல்களால் சூழ்ந்து வளம் நிறைந்தது; வாய்மை கவருது, வழக்கறியும் அவையினை