பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் முன் கின்று, பரமன் பாட்டைப் பாடிக்காட்டினர்; புலவர்கள் எல்லோரும் பாராட்டினர்; ஆனல், அவருள் ஒருவராய்த் தலைமையேற்று கிற்கும் நக்ர்ே, "இப் பா, குற்றமுடைத்து’ என்று கூறி மறுத்தனர்; அந்தணன் "ஆண்டவன் பாட்டும் பிழையுடையதா?’ என்று எண் ணித் துணுக்குற்றுக் கோயிற்குச் சென்று கடவுளிடத்தில் நடந்தது கூறினன். 'இறைவன் தமிழ்மன்றம் வந்து, "என் பாட்டில் பிழைகண்டார் யார்?’ என்று கேட்க, நக்கீரர், நான்” என்றார்; இறைவன் குற்றம் யாது? என்று வினவ, பெண்கள் கூந்தலுக்குச் செயற்கை மணம் உண்டே அன்றி, இயற்கை மணம் இல்லை; ஆனல் கின் பாட்டு இயற்கை மணம் உண்டு என உரைக்கிறது; ஆத லின், கின்பாட்டு இல்லது கூறல் என்னும் குற்ற முடைத்து’ என்று கூறினர். இறைவன், அரம்பையர் குழலுக்கும் மணம் செயற்கையில் உண்டாயதுதான்?” என, நக்கீரர், அதுவும் அத்தகையதே' என்றார். பின் இறைவன், இறைவி கூந்தல் எத்தன்மைத்து?’ என, நக் ாேர், அதுவும் அத்தன்மைத்தே' என்று சிறிதும் தயங் காது கூறினர். உடனே இறைவன் தம் துதல்விழியினைச் சிறிதே காட்டினர்; ஆனால் நக்கீரனரோ, அதைக் கண்டும் சிறிதும் அஞ்சாது கின்று, 'ஒருகண் அல்ல; உடலெ லாம் கண்கொண்டு காட்டினும் அஞ்சேன்; கின் செய்யுள் குற்றம் குற்றமே என்று கூறினர். சிவபெருமான் சினங் கொண்டு, 'என் பாட்டிற்கும் பிழை கண்டு, எம் மனைவி கூந்தலுக்கும் குறை கூறினய் ஆதலின், குட்டகோய் கொண்டு உலகெலாம் அலைக!” என்று சாபம் தந்தனர். இறைவன் கூறிய வன்சொற் கேட்ட நக்கீரர் உடல் நடுங்கி, "கருணையம் கடலே, அறிவிலேன் கூறிய பொய்யுரை யினைப் பொறுத்தருளல் வேண்டும்’ என்று பற்பல கூறிப் பலகால் வணங்கினர்; இறைவன், நக்கீரனர் தம் வழி பாடு கண்டு இரங்கி, இந்நோய் கயிலை காணிற்றிரும் என்று கூறி மறைந்தார். அரசனும் புலவரும் அவர் திருவிளையாடல் கண்டு வியந்து போற்றினர்; கருமி கிழி பெற்று மகிழ்ந்தான்். . . . . .