பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"76 - க் கீ ர ர்

புலவனுய் உங்கள்முன் வந்துளான் ; ஆதலின், அறி யாமை ஒழிய அவனே வணங்குங்கள்,” என்ற குரல் கேட்டது; அதனேக் கேட்ட புலவர்கள், அவரை வணங்கு வதற்கு முன்னரே, நக்கீரர் வணங்கிப் பிழை பொறுக்க வேண்டினர்; இறைவன், தன் பெயர் மதுரைப் போல வாயர் என்று கூறி மறைந்தார். அவர் செய்த பொருள் அால் இறையனர் பொருள் என்னும் பெயரில் வழங்க லாயிற்று. .

இறைவன் செய்த களவியலுக்கு உரை எழுதி முடித்த புல்வர்கள், தத்தம் உரையே சாலச் சிறந்தது என வாதிடலாயினர்; வாதத்தில் முடிவு காணமாட்டா அவர் கள் தங்கள் உரைகளின் தகுதி தகுதியின்மைகளே அறிந்து கூறுமாறு இறைவன் திருமுன் கின்று முறை யிட்டனர்; ஆ ல வ யி ன் அவிர்சடைப்பெருமான் புலவர்களே நோக்கி, இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகன், ஊமை உருத்திர சன்மன்முன் உங்கள் உரைகளைக் கூறி அவன் கூறும் முடிவினே ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிஞர்; புலவர்கள் ஊமை உாைவளங்காண்பது எங்கனம் ? என்று உளம் கவன்றனர். அவர் கவலையறிந்த இறைவன், 'உங்கள் உரைகளே அவன்முன் படியுங்கள்; எவர் உரை கேட்டுக் கண்ணிர் உகுப்பனுே அவர் உரையே சிறந்ததாம் எனக் கொள்ளுங்கள்' என்று கூறினர். புலவர்களும் அவ்வாறே, ஊமைமகனை மன்றம் கொண்ர்ந்து மண்டபத்தே இருத்தி, மலரிட்டு வாழ்த்தி, வணங்கித் தத்தம் உரைகளை உரைத்தனர்; ஊமை, நக்கீசர் கபிலர் பரணர் ஆய மூவர் உரைகளேக் கேட்டபோது கண்ணிரும் களித்தலும் உடையணுதல் கண்ட புலவர்கள், அம்மூவர் உரைகளையும் சிறந்தனவாக் கொண்டுமதித் தனர்.” என்று கூறுகிறது. . -

களவியல் உரை தோன்றிய வரலாறு குறித்துக் கூறப்படும் இவ்விரு கதைகளேயும் கோக்கினல், அவற்றுட் கூறப்படும் பல கிகழ்ச்சிகள் முரண்படுவனவாதல் விளங் கும். களவியல்உரை, பொருள் இலக்கணம் பெற