பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - த க் .ே ர்

களிலும், மாநகர்மன்றங்களிலும், ஊரம்பலங்களிலும், கந்தழி கின்ற பெருவெளிகளிலும் அவன் உறைவன் ; அவன் உறையும் இடங்களாக கான் அறிந்தன. இவை ; அறிந்தவாறே கூறினேன்; யான் கூறிய இடங்களிலேயாயி லும், அன்றி வேறு இடங்களிலாயினும் அவனேக் கண்டால், கண்டபோதே, முகனமர்த்து எத்தி, கைகூப்பி வாழ்த்தி, காலுறவணங்கி, அவன்புகழைப் பரவி வாழ்க்கி, ' புரையு. கர் இல்லாப் புலமையோய்! கின்னே அளத்து அறிதல் எம் போன்ற சிற்றுயிர்க்கு அருமையாதலின், கின் திருவடி உள்ளி வந்தனென்” என்று எடுத்து நீ கருதிவந்ததை அறி விக்கும் முன்னரே, அவனேச் சேவித்து கிற்கும் கூளியர் பலரும் சென்று, ' பெரும அறிவுமுதிர்த்த, வாய்மை வழுவாத இரவலன் ஒருவன் கின்புகழ் கயத்து, இனியவும் நல்லவும் திணிபலஏத்தி வந்து கிற்கின்றன்; அவன் சின்னல் அளிக்கத் தக்கான்காண்’ என்று கூற, பழமுதிர்சோலை மலை கிழவோனுகிய முருகன், கண்டார்க்கு அச்சம் அளிக்க வல்ல தன் நெடியவடிவை மறைத்துக் கொண்டு வந்த, தன் மணங்கமழ் தெய்வத்து இளகலம்காட்டி வீடுபேறு பெற கினைத்து வந்த கின்வாவை பான் முன்னரே அறிவேன்; அவ் வீடுபேறு எய்துமோ எய்தாதோ என அஞ்சம் கின் அச்சம் ஒழிக ;” என்பன போன்ற அன் புனைகள் பல త్ప్రశోక్షేత్తె: கடல் சூழ்ந்த இவ்வுலகில் ஒப்பும் உயர்வும் இன்றி வாழ்வோன் நீ ஒருவனே. எனத்தோன்று மாறு, விழுமிய பெறலரும் பரிசிலிரம் வீடுபேற்றினைத் தர்து அருளுவன். . . . . . திருமுருகாற்றுப்படை அளிக்கும் பொருள் இது. ஆசிரியர் நக்கீரனர், திருமுருகாற்றுப்படையினே, முந்நூற்றுப் பதினேழு அடிகளைக்கொண்ட ஆறு பிரி வாகப் பிரித்துப் பாடியுள்ளார்: - -

முதற்பிரிவில், வீடுபேறு பெற்ருன் ஒருவன், அதைப் பெற விரும்புவான் ஒருவனே நோக்கி, “நீ முருகன் . திருவடிகளைப் பெறவிரும்புவையாயின், அவற்றை இன்னே பெறுகுவை ; அவற்றைப் பெறுதற்கு அவனேக் காண