பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருளற்றப்படை 9].

' இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி " என்று கூறிய உண்மை உணாற்பாலதாம். -

ஐந்தாம் பிரிவில், கிளையோடு கள்ளுண்டு மகிழ்ந்த கானவர், தொண்டிகச் சிறுபறை முழக்கிக் கொண்டே குரவைக் கூத்தாடத் தொடங்கினர் ; அவர் ஆடலைக்கண்ட அவர் மகளிரும் தாமும் குரவை ஆடி மகிழ்வாராயினர். அவர் ஆடல் கண்ட முருகன், அக் குரவையினைத் தாமும் ஆடவிரும்பி, வேலன் தக்கோலத்தைக் கலந்து, சாதிக் காயை நடுவேயிட்டு, காட்டு மல்லிகையுடன் வெண்டாளி மலரையும் விரவிக் கட்டிய கண்ணியினைச் சூடிச், செவ் வாடை உடுத்து, அசோகத்தளிரைக் காகில் அணி பெற அணிந்து, கச்சை கட்டி, கழல் அணிந்து, வெட்சி சூடி, குழல் கோடு வேறு பலவியங்கள் இவற்றின் இசையினே எழுப்பித் தகர்மீதும் மயில் மீதும் ஏறிக் கோழிக் காடியை உயர்த்தித், தன்னேச் சேவித்துப் பாடும் மகளி ரோடும், சேவிக்கும் மகளிரோடும் தமிழகத்து மலைகள் தோறும் சென்று ஆடி மகிழ்வன் என்று கூறப்பட்டுளது.

இந்தப் பகுதியில், காட்டு வாழ் கானவர் வாழ்க்கை, அவர் சிறுகுடி, அவர்தம் கிளே, ஆடவர் பெண்டிர் ஆடை அணி வகைகள், அவர்கள் ஆடல் பாடல், அக்காட்டு இசைக் கருவிகள் அவ்வளவும் அழகாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. 1 -

ஆரும் பிரிவில், முருகன் முற்கூறிய இடங்களிலேயே அல்லாமல், ஊர் தோறும் விழாக் களத்தின் கண்ணும், அன்புடையார் எத்திப் பரவும் இடங்களிலும், காட்டிலும், காவிலும், ஆற்றிலும், குளத்திலும், ஆற்றிடைக் குறை யிலும், முச்ச்ங்கியிலும், காற்சந்தியிலும், கடம்படிகளிலும், மன்றங்களிலும், அம்பலங்களிலும், கந்தழி கின்ற வெளி களிலும் உறைவான்; அவன் உறையும் இடங்களாக கான் அறிந்தன. இவை; இவ்விடங்களில்ாயினும், வேறு இடங் களிலாயினும் அவனேக் கண்டால், முகனமர்ந்து ஏத்தி, கைகூப்பி வாழ்த்தி, காலுற வணங்கி, அவன் புகழைப்