பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை - 93.

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் ! பெரியோர் எத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவவி! போர்மிகு பொருக ! குரிசில்!? (உடுங் - எசு)

என்ற பகுதி, முருகன் வரலாறு பலவும் அமைந்த முன்னி ப் பரவலாய், அவன் அருள் வேண்டி நிற்கும் அடியார்

அவன்முன் கின்று பாடிப் பரவுதற்காம் பாராயணப்பாட

லாய் அமைந்து காணப்படுதல் காண்க.

திருமுருகாற்றுப்படையின் இடையிடையே வரும், கோபத்தன்ன தோயாப் பூந்துகில்,” “கைபுனைத் தியற்ருக் கவின் பெறு வனப்பு.’ ‘புகைமுகந் தன்ன மாசில் துவுடை,” 'மந்தியும் அறியா, மரன்பயில் அடுக்கம்” முதலிய அருச் தொடர்கள் கற்ருேர்க்குக் கழிபேருவகைதரும் இயல்பின வாம். திருமுருகாற்றுப்படையினே வரிவளியாக ஆராய்ந்து நோக்குவதாயின், அது ஒரு தனி நூலாய் முடியுமாதலின், அதன் சிறப்பெலாம் உணர விரும்புவோர், முழு. அாலினையும் கண்டு களிப்பாாக என விடுத்தனம்.