பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 159

செய்து, தமிழிலக்கியம் தோன்றத் துணை புரிந்ததோடு, அப் புலவர் வேண்டும்போதெல்லாம், வரையாது வழங்கி, அப்புலமையுள்ளம், வறுமையால் வாடிக் கருகிவிடாது, பொருள் கிறைந்த பாக்கள் பல பாடிப் பயன் விளக்கப் பெருந் துணைபுரிந்தவர் அக்கால அரசர்களே யாவர். ஆகவே, அப் பாக்களின் இயற்றும் வினே முதல்வராகிய இப் புலவர்களைக் கண்டு பாராட்டிய காம், அப் பாக்களின் ஏவும் வினே முதல்வராகிய அவ்வரசர்களைக் கண்டும் பாராட்டக் கடமைப்பட்டவரன்ருே !

நல்ல இலக்கியங்களே நமக்களித்த புலவர்களை நாம் மறந்து விட்டோம் ; ஆனால், தமக்குப் பொருள் அளித்துப் புரந்த அரசர்களே அப்புலவர்கள் மறந்தால்லர் ; தாம் பாடிய பாக்கள் இடையிடையே, அவ்வரசர்களின் குணஞ் செயல்களே எடுத்துக் கூறிப் பாராட்டி, அவர்தம் வரலாற் றினே ஒரளவு உணர்த்திச் சென்றுள்ளனர். இவ்வாறு, அப் பாக்கள் துணை கொண்டு நோக்குவார்க்கு நாற்று அறு பதின்மர்க்கும் மேற்பட்ட அரசர்களின் வரலாறு விளங் கித் தோன்றும். அவ்வாறு அறிந்த அவ்வரசர் வாலாறு களேயும், ஒரளவு அறிந்து, தமிழகத்தார்க்கு அளிக்க எண்ணி, சங்க கால அரசர் வரிசை" என்ற தொகுப் பின் கீழ்ச் சேரர், சோழர், பாண்டியர், வள்ளல்கள், அகுதை, திரையன் என்ற தலைப்புக்களைக் கொண்ட ஆறு நால்களின் வழியாக, அளித்துள்ளோம். புலவர் வரலாறுகண்டு நன்றி பாராட்டிய தமிழகம், அப்புலவர்க்குப் பொருள் அளித்துப் பேணிய அரசர் வரலாறும் கண்டு நன்றி செலுத்துமாக.

இம் 黨