உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாநகர்ப் புலவர்கள்

முதலாயினுேரை வென்ற வெற்றிச் சிறப்பினே விளக்கிநிற். றல் காண்க. கரிகாலன், தன் நாட்டு வளம்பெருகச் செய்த வகைகளே விரித்துக்கூருது, அவன் நாட்டிற் பரவியிருந்த பெரும்பெருங் காடுகளே எல்லாம் அழித்து வயலும், வாய்க்காலும் விளங்கும் வனப்புகிறை நாடாக்கி, அவ் வயலும் வாய்க்காலும் நற்பயன் அளித்தற்கு இன்றியமை யாததாய நீர்வளம் தருவான் வேண்டி, கிறைர்ேக் குளங்கள் பல தோண்டித் துணைபுரிந்தான்் எனச் சுருங்க உரைத்து விளங்க வைத்துள்ளார் , 'காடு கொன்று நாடாக்கிக், குளம் தொட்டு வளம் பெருக்கி திருமா வளவன் என அழைக்கப்பெறும் கரிகாலனின் வேலின் விறலயும் கோலின் அருளையும் பாராட்ட எண்ணிய புலவர், அவன் வேல், தலைவன் சென்ற பாலேகிலம் போவார்க்குப் பெருந்துயர் அளித்தலேபோல், பகை வர்க்குப் பெருந்துயர் அளிக்கும் கொடுமை உடையது; அவன் செங்கோல், தலைமகள் ஒருத்தியின் தோள், அவள் தலைவனுக்கு இன்பம் அளிப்பதேபோல், அவன் நாட்டு வாழ் மக்களுக்கு இன்பம் அளிக்கும் தண்ணளி

கிறைந்தது என்று கூறுவாராயினர்.

"திருமாவளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம்; அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே."

- (பட்டினப் : உக்க ட0க) , & கடியலூர் உருத்திரங்கண்ணனர், தொண்டைமான் இளந்திரையனேயும், கரிகாற் பெருவளத்தான்ேயும் பாட முற்பட்டுத் தமிழ்நாட்டின் இயற்கை வளமும், செல்வ வளமும் ஒருங்கே விளங்கப் பாடியுள்ளார். அந்தணர், ஆயர், உமணர், உழவர் முதலாம் உள்நாட்டு மக்கள் குறித்தும், பரதவர் வணிகர் முதலாம் கடற்கரை நகர்வாழ் மக்க்ள் குறித்தும் அவர் கூறுவன, அக்காலத் தமிழ்நாட்டு .கிலையினைத் தெளிய உணரத் துணை புரிவனவாம்.

மனே முன்னிடத்தே அழகிய சிறு பந்தல்; அப்பந்தர்க் மில் கட்டப்பெற்ற செழுமையுற வளர்ந்த ஒர்