பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழாத்தலையார் 55.

என்று கண்ணிர்விட்டுக் கலங்கினர் எனப் பாடி, அக் களத்தின் கொடுமையினேயும், அவன் கொடையின் சிறப் பினேயும் ஒருங்கே பாடினர். . . * : *

"முகவை இன்மையின் உகவை இன்றி

இரப்போர் இரங்கும் இன்னு வியன்களத்து பாடிவந்த தெல்லாம் கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்தகின் - அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனினே. (புறம்:க.சு.அ). வெண்ணிப் பறந்தலே என்ற போர்க்களத்தே, கரிகால ைேடு போரிட்டுத் தோற்ருேருள் பெருஞ்சேரலாதன் என்பவனும் ஒருவனவன்; அப் போரில், கரிகாலன் எறிந்த வேல் ஒன்று சேரலர்தன் மார்பிற் பாய்ந்து முதுகின்வழியே வெளிவந்து விட்டமையால், அவன் முதுகில் புண் உண்டாகிவிட்டது; வீரர் முதுகில் புண் பெறுவதை இழிவெனக் கருதுவர்; முதுகிற் புண்பெற்ற வீரர் வாழ விரும்பார்: சேரலாதன் ஒரு பெருவீரனவன்; அவன் தன் புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் விட்டான். சேரலாதனின் இச் சீரிய செயல் புலவர் கழாத்தலையார்க் குத் தெரிந்தது; அவன் பெருமையும், அவன் இறந்தமை யால் உண்டாய கேடும் விளங்க அழுது பாடினர் ; முழு கிலா நாளன்று மாலை கிழக்கே திங்களையும், மேற்கே ஞாயிற்றையும் காணலாம் எனினும், சிறிது நேரத்திற் கெல்லாம், மேலைத்திக்கில் ஞாயிறு மறைந்துவிடும். இந்த உண்மையை உணர்ந்த கம் புலவர், தமிழகத்தின் கீழ்க் கண்ண்தாய சோழநாட்டில் கரிகாலன் தோன்றியவுடனே, மேற்கே சேரநாட்டு வேந்தனகிய பெருஞ்சேரலாதன் மறைந்தமைக்கு, முழுகில்ா நாள் நிகழ்ச்சியினே உவமை காட்டியுள்ளமை கழிபேரின்பம் பயப்பதாம்.

"உவவுத் தலைவந்த பெருகாள் அமயத்து

இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர் . . புன்கண் மாலை மலைமறைந்தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த புறப்புண் நாணி மறத்தகை.மன்னன்

வாள்வ்டக் கிருந்தனன்...: , fiறம் : கடு)