பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. காப்பியாற்றுக் காப்பியனுர்

இவர், காப்பியாறு என்னும் ஊரில் பிறந்த காப்பிய ஞர் என்ற பெயருடையவராவர்; காப்பியன் என்ற பெய ஆருடையார் பலர் தமிழறிவுடையாாய் வாழ்ந்துள்ளனர்; தமிழ்மொழியின் முதற் பேரிலக்கணமாகிய தொல்காப்பிய நூலாசிரியர் பெயரும் இக்காப்பியனர் என்பதே; காப்பியர் என்பார், காப்பியக் குடிவழி வந்தவர்; காப்பியக்குடி, சேர, சோழ, பாண்டியர் குடிகளேப்போல் ஒரு பழங்குடி, அஃது அந்தணரைக் குறிக்க வழங்கும் என்று கூறுப. சிலர், காப்பிக்குடி என்பது ஒர் ஊரின் பெயர்: அது பழைய புகார் நகரத்திற்கு ஏறக்குறைய ஒரு காவத தூரத்தில் இருத்தல்வேண்டும் என்று கூறுவர். தஞ்சை, மாயவரத்தை அடுத்துக் காப்பியக்குடி என்ருேர் ஊர் உளது; தென் ஞர்க்காடு மாவட்டத்தில், விழுப்புரத்திற்கு அணித்தே காப்பியாமூர் என்னுமோர் ஊர் உளது; இக்காப்பியனச் பிறந்த காப்பியாறு யாண்டுளது என்பதையும் அறிந்து கொள்வதற்கில்லை; நற்றிணை பாடிய ஆசிரியர்களுள், காப்பியஞ்சேந்தனர் என்பாரொருவர் உளர்; அவ்ர் இக் காப்பியனர் மகளுவர் என்று கருதுவர் ஆராய்ச்சியாளர்.

காப்பியாற்றுக் காப்பியனரால் பாடப்பெற்ற பெருமை யுடையான், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆவன் : இவர் பாடிய பாடல்கள், பதிற்றுப்பத்தில் அச்சேர் வேக் தரைப் பாடிய கான்காம் பத்துப் பர்டல்களாம். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், இமயவரம்பன் நெடுஞ்சேரலாத னுக்கும், வேளாவிக்கோமான் பதுமன்தேவியார்க்கும் பிறந்த பெருமை மிக்கோவைன்; இவன் முடிபுனைதற் குரிய காலத்தே, உரிய முடியும் கண்ணியும், காணப் பெருமை கண்டு, நாரால் புனேந்த முடியும், களங்காயால் கட்டிய கண்ணியும் கொண்டு முடிசூட்டிக் கொண்டானத லின், இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனப் பெயர் பெற்ருன் எனப் பதிற்றுப் பத்தின் பழைய உரையாசிரியர் கூறுவர்: இம்முடியின் வனப்பினைப் புலவர்