பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றனுர்

காஞ்சியைச் சேர்ந்த கொற்றனர், கச்சிப்பேட்டுட் :புக்கு வாழ்ந்தமையால் கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றனர் என அழைக்கப்பெற்ருர், கச்சிப்பேட்டு காஞ்சிபுரத்தை அடுத்துள்ளதொரு பேரூர். ஒரு நகரின்புறத்தே அதைச் சார்ந்து, இக்காலத்துச் சந்தைபோல் நாள்தோறும் கிகழும் வணிக கிலேயத்தைக் குறிக்க வழங்கிய பேட்டு என்பது, இன்று பேட்டை எனத் திரிந்து வழங்குகிறது. புலவர் பலர் வாழ்வால் பெருமையுற்றது. நன்னகையார், இளந்தச்சனர், பெருந்தச்சனுர் முதலிய புலவர்கள் அவ் ஆரில் வாழ்ந்தவரே ஆவர். இவர் பெயர்க்கு முன்வரும் காஞ்சி என்ற சிறப்பு, ஊர்பற்றி வந்ததன்று காஞ்சித் தினே பாடிய சிறப்பால் வந்தது எனக் கூறுவாரும் உளர். ஆனல் அதை உறுதி செய்தற்காம் சான்று ஒன்றும் இல்லை. - *

ஒரு தலைவன் பொருள்கருதிப் பிரிந்துசென்றுளான்; அவனே தன் மனேவிமாட்டுப் பேரன்பு உடையவன்; அதனுல் சென்ற அவன், இடைவழியில் தன்னே நினைந்து தான்் மேற்கொண்டு வந்த வினையையும் மறந்து மீண்டு விடுதலும் செய்வரோ என அஞ்சினுள் அவன் மனைவி, அஃதறிந்த அவள் தோழி, அவர் கின்பால் கொண்டுள்ள அன்பு அவரை மீளத்துாண்டினும், அவர் சென்ற வழியில் கடமையில் பிறழ்வது கவினுடையதன்று என்ற அறிவுரை வழங்கும் அரிய காட்சிகள் பல உண்டு அவற்றை அவர் காண்பர் : உடனே காதலினும் கடமையே பெரிது எனும் எண்ணம் அவர் உளத்தே தோன்றும் வறிதே மீள்வதைக் கைவிடுவர்; ஆகவே கவலற்க எனத் தேற்றிள்ை. அவ் வாறு தேற்றிய தோழி, அவற்குக் கடமையுணர்ச்சியை உணர்த்தும் காட்சிகளுள் ஒன்றைக் கூழுத்தொடங்கி, அக் காட்டு நெறிவாழ் கலைமான் ஒன்று பசிநோயைப் போக்கு தற்பொருட்டுத் தன் கால்களால் உதைத்து வளைத்த மரத்தின் பீட்டைகளைத் தன் குட்டி தின்ஆறு எஞ்சியிருந்