பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. வள்ளல்கள்

矚 . பண்ணே மாலையிலும் பாடத் தொடங்கிவிட்டனர் : இவ்: வாறு, பண்ணிசைக்கும் பாண்குடி வந்தார்தம் பண்ணறி வையும் மறக்குமாறு செய்யவல்லது நள்ளியின் கொடைப் பெருமை என்பதறிந்த வன்பரணர், அவன் வள்ளன்மை யினை வியந்து பாராட்டுவாராயினர் : -

1 நள்ளி வாழியோ! நள்ளி! நள்ளென்

மாலே மருதம் பண்ணிக் காலக் கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி வரவெமர் மறந்தனர்; அதுே புரவுக்கடன் பூண்ட வண்மையானே." (புறம் : கசக) கண்டீரக் கோவின் புகழ் பிறிதொரு வகையானும் விளங்கித் தோன்றுகிறது ; கண்டிரக்கோப் பெருநற் கிள்ளிக்கு இளையான் ஒருவன் இருந்தான்்: இளங் கண்டீ ரக்கோ என அழைக்கப்பெறும் அவன், விச்சிக் கோவின் தம்பியாய இளவிச்சிக் கோவுடன் நட்புப் பூண்டிருந்தான்் ; ஒருநாள் இருவரும் ஒன்றுகூடி, ஒரிடத்தே ஒருங்கிருந்த காலை, ஆண்டு வந்த புலவர் பெருந்தலேச் சாத்தனுரை இருவருமே விரும்பி வரவேற்றனர்; ஆனல் புலவரோ, அவருள் இளங்கண்டீரக்கோவை மட்டும் அன்போடு தழுவிக் கொண்ட்ார்; அதுக்ண்ட் இளவிச்சிக்கோ, ஐயன்மீர் என்னேத் தழுவுவதொழிந்த விேர், இளங்கண் eர்க்கோவை மட்டும் தழுவிக்கொண்டது எனே?' என அன்புடன் வினவிஞ்ன். அதற்கு விடையாக, வேந்தே, இக் க்ண்டிரக்கோ வண்ம்ைப்ர்ற் பெற்ற வளமார் புகழ் உடையனவன்; இவன் நாட்டில், மனேக்குரிய ஆடவன், வினே கருதி வெளிநாடு சென்றிருந்த காலத்தே, அவன் மனநோக்கிச் சென்ற வழியும், பரிசிலர் பொருள் பெருது மீளார்; ஆடவன் இன்மையால், அவர் பொருள் இன்றி மீள்வதை விரும்புவாளல்லள் அம் மனேக் கிழத்தி; அவள் தன் அளவிற்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு, சிறிய பிடியானேன்யயாவது பரிசில் அளித்து அனுப்புவள்; அத் துணைக் கொடைவளம் உடையது அவன் நாடு; அவன் காட்டு வாழ்வார் நல்லியல்பே இஃதாயின், அவன் கொடை