பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பாரி

பறம்பு என்ற மலையையும், அம் மலையைச் சூழ இருந்த முந்நூறு ஊர்களைக்கொண்ட சிறு நாட்டையும் உரிமை ஆண்டு ஆண்டிருந்தான்் பாரி எனும் பெயருடைய வேளிர் குலத்தான்் ஒருவன். பாரியும் பாண்டியன் மண்டலமே” என முடியும் பாண்டி மண்டல சதகச் செய்யுளாலும், மதுரையிலுள்ள பழைய சிறைக்கூடத்து வடபுறச் சுவரில், பறம்பு நாட்டைப்பற்றிக் கூறப்பட்டிருத்தலாலும், பறம்பு நாடு பாண்டி காட்டைச் சேர்ந்தது என்பது அறியப்படும்; பாண்டி நாட்டுத் திருப்பத்துணர்ச் சிவன் கோயில் கல்வெட் டொன்றில், 'புறமல்ே காட்டுப் பொன்னமராவதி யூருடை யான், திருக்கொடுங் குன்றாருடையான்,' என்ற தொடர் காணப்படுகிறது; இப் பக்கத்துக் கொட்டாம்பட்டி மலைப் பகுதியைச் சேர்ந்த கூற்றம் பிரமநாடு என்ற பெய சான் இன்றும் வழங்குகின்றது; ஈண்டுக் கூறிய புறமலை நாட்டைப் பறமலைநாடு என்பதன் மரூஉவாகவும், பிரம காடு என்பதைப் பறம்பு நாடு என்பதன் திரிபாகவும் கோடல் பொருந்தும்; ஆகவே, இன்று பிரான்மலை என்பதே, பாரிக்குரிய பறம்பு மலையாம் எனக் கொள்வ கில் யாதொரு தடையும் இல்லே; மேலும் கொடுங்குன்றம் என வழங்கும் இப் பிரான் மலையில் கோயில் கொண் டிருக்கும் சிவபிரானுக்குப் பாரீசுவர முடையார் என்ற பெயரும் உண்டு எனப் பழைய கல்வெட்டுக்கள் கூறுகின் றன; இதனுைம், பிரான், மலேயே, பண்டு பறம்பு மலே என்ற பெயரான் வழங்கிவந்தது என்பது உறுதி செய்யப் படும்; பாண்டிநாட்டின் கீழ்ப்பால் அமைந்த இம் மலே, பண்டைச் செய்யுட்களில் கூறியவாறே, வளமும் பெருமை யும் வாய்ந்திருத்தலோடு, சிதைவுற்ற பழைய அரணையும், இனிய நீர்ச்சுனைகளையும், கிறைந்த தேனடைகளையும் கொண்டு விளங்குகிறது என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும். -

நால்வேறு வளனும் கணிமிகக் கொண்டிருந்த பறம்பு நாடாண்டிருந்த பாரி, பண்டு புகழ்பெற்று விளங்கிய