பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளல்கள் &# *్మ -

அறிவிலாச் சிறியோராயினும் அவர்க்கும், அவர் வேண்டு வன அளிப்பன்; பொருள் வேண்டி வந்து கின்ருேர் இழி குணமுடைய கீழோரே ஆயினும், அவர்க்கும் அவர் விரும் புவன அளிப்பன்; ஆகவே, அவன்பால் வந்து வறிகே மீண்டவர் எவரும் இார் :

மடவர், மெல்லியர் செல்லினும் கடவன் பாரி கைவண் மையே." (புறம் : க0r): பறம்பு நாடு முந்நூறு ஊர்களையுடையது ; அம் முன் அாறு ஊர்களையும் தன்பால் பொருள் வேண்டி வந்த இா வலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஊராகக் கொடுத்து அவர் உடமையாக்கி விட்டான்; அவன் உடைமையாக எஞ்சி கின்றது பறம்புமலே பொன்றே;

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னடு: - முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். (புறம் : க.க.0). பாரியின் கொடைவளம் கண்ட புலவரெல்லாம், கொடைத்திறத்தில் அவனுக்கு கிகர் அவனே; கில வுலகில் அவனுக்கு நிகராவார் எவரும் இலர் என உணர்ந் தனர்; கைம்மர்று கருதாமல் உலகைப் புரப்பதில் மாரி, பாரிக்கு கிகரே எனினும், வேண்டுவார்க்கு வேண்டும் போது வேண்டும் அளவு பொருள் அளிக்கும் பாரிடோல், மாரி அளிப்பதில்லை; வேண்டும்போது பெய்யாது வேண் டாதபோது பெய்யும்; வேண்டும் அளவு பெய்வதும் இல்லை; ஆகவே, உல்கைப் புரப்பதில் பாரிக்கும் மாரிக்கும் ஒப்பு. இருப்பக் கண்டும் புலவர்கள் மாரியைப் புகழாது, பாரி யின் கொடை, பாரியின் வள்ளன்மை, பாரியின் அன்பு, 'பாரியின் புகழ் என எங்கும் எப்போதும் பாரி பாரி பாரி என்று பாரி ஒருவனேயே புகழ்வாராயினர் :

என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செங்காப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்:

மாரியும் உண்டு, சண்டு உலகுபுரப் பதுவே. - - - - - - - - - . (புறம்: கஎே).