பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 57

றேன்; என்ருலும், இப்படை பறம்புக்கோட்டையைப் பாழ் செய்துவிடும், பறம்பு பணிந்துவிடும் என்று எண்ணு தீர்கள்; முயன்று போரிட்டுப் பெறுதல் உங்ளாலும் இய லாது; உங்கள் வாள்வலி கண்டு அஞ்சிப் பாரியும் பறம்பி னேத் தாான்,” என்று அறிவுரை கூறினர்.

அளிதோ தான்ே பாரியது பறம்பே ; நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ; ஒன்றே, சிறியிலே வெதிரின் கெல்விளை யும்மே ; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே ; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு விக்கும்மே: கான்கே, அணிகிற ஒரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே; வான் கண் அற்று.அவன் மலையே; வானத்து மீன்கண் அற்று அதன்சுனேயே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும், புலங்தொறும் பரப்பிய தேரினி ராயினும், தாளில் கொள்ளலிர், வாளில் தாரலன். (புறம் : கoக பறம்பு கோடற்கு அருமையுடைத்து என்பதை அத் துணைத் தெளிவாக எடுத்துக் கூறியும், மூவேந்தர் முற்று கையைக் கைவிட்டாரல்லர், கபிலர் பொறுமை இழந்தார்; வேந்தர்களே வெகுண்டு நோக்கினர். வேந்தர்காள்! பறம்புநாடு, வளமிக்க ஊர்கள் முந்துாறு கொண்டது. என்ற வேட்கை மேலிட்டு வந்தியாயின், உங்கள் ஆசையை விட்டொழியுங்கள், பறம்புகாடு, முந்நூறு ஊர்களே உடைத்து என்பது உண்மையே; எனினும், அவற்றின் மீது பாரிக்கு உரிமையில்லை; தன்னைப் பாடிய இரவலர்க்கு. அவ்வூர்களனைத்தையும் பரிசிற் பொருளாக அளித்து ஆண்டுகள் எத்தனையோ ஆகின்றன; ஆகவே, அவற்றின் பால் ஆசைகொண்டு பயன்கோடல் இல்லை; நான் இருக் கின்றேன்; பாரி இருக்கிருன், பறம்புமலை இருக்கிறது; இவையே எங்கள் உடைமை; பறம்புநாடு இல்லாது போயினும், பறம்பு மலையையாவது கைக்கொண்டு