பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 7 3.

வரும் பெருஞ் செயல் கண்ட வேந்தர் மூவரும், அச்சமும் வியப்பும் கொண்டவராய், மணவினேக்கு மேலும் தடை யாக இருத்தல் தகாது எனக் கொண்டு மணவிழாவை முன்னின்று முடித்து, மணமக்களே வாழ்த்தி மகிழ்ந்தனர்; பாரி மகளிர் மணவினே கண்டு மன அமைதியுற்ருர் ஒளவையாரும்,' என்ற கதையொன்றும் காட்டில் வழங்கு.

கிறது.

இவ்வாறு பாரி மகளிர் மணங் குறித்துப் பல்வேறு பட்ட கருத்துக்கள் நாட்டில் சிலவுகின்றன ; பாரி மகளிர் மணத்திற்கு முயன்றார் கபிலர் எனக் கூறும் புறநானூற். றுச் சான்றும், அம் மகளிரை மலையற்கு மணம் புரிவித் தார் கபிலர் எனக் கூறும் திருக்கோவலூர்ச் சாஸ்னச் சான்றும், அவரைத் தெய்வீகனுக்கு மணம் செய்வித்தார் ஒளவையார் எனக் கூறும் தமிழ் நாவலர்ச் சரித்திரச் சான்றினும் வலிவுடையன ஏற்றுக் கோடத்தக்கன ஆத லின், பாரி மகளிர்க்கு மணஞ் செய்வித்தவர் கபிலரே : ஒளவையாால்லர் என்று துணிதலே நன்றாம்.