பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வள்ளல்கள்

பொருள் வேண்டியக்கால், பகைவர் நாட்டுட் சென்று பெரும்பொருள் கொணருமாறு தன் படைவீரரை அனுப்பு வன்; அவர்களும், அவ்வாறே சென்று, வென்று பெரும் பொருள்பெற்று, ஆண்டுத் தன் அரசன் -ಆದಿ।rவந்தர்க்கு வழங்கியன்போக எஞ்சியவற்றைக் கொணர்ந்து கொடுப்பர்; இதல்ை, நல்லியக்கோடன் கொடைத் தொழில் நாடொறும் ஈடைபெறுவதாயிற்று:

" பொருநர்க் காயினும், புலவர்க் காயினும்

அருமறை காவின் அந்தணர்க் காயினும் கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன அடையா வாயில் அவன் அருங் கடை." - .. - (சிறுபான்: உhே.-சு)

" திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி

விறல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி நியவர், பாணர் புன்கண் தீர்த்தபின் வயவர் தங்த வான்கேழ் விதியமொடு தரீஇ, அன்றே விடுக்கும் அவன் பரிசில்."

(சிறுபாண்: உசசு-சுக) ஆற்றலும், அருளும் உடையணுய நல்லியக்கோடன், ஆடவர்பரல் அமையவேண்டும் அரும்பண்புகள் அத்தனே யும் பெற்றிருந்தான்் ; கல்லியக்கோடன், செய்ங்ான்றி மறவாச் சிறப்புடையன்; சிற்றினம் சோன்; இன்முகம் உடையன்; இனிய பண்பினன்; அஞ்சி அடைந்தாசை ஆட் கொள்ளும் அருளுடையான்; ஆறிய சினத்தன் அணி வகுத்து கிற்கும் ஆற்றல் மறவரை அழித்தொழிக்கும் ஆண்மையாளன்; அழிந்து ஓடிவரும் தன் படையைக் தடுத்து நிறுத்தித் தாங்கவல்ல தாளாளன்; எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் கிண்ணியன்; கண்டார் விரும்பும் கவினுடையான்; ஒருதலைப்படா உயர்நீதியுடையான்; வரு 1வது உணரும் வாலறிவுடையான்; பெண்டிர் விரும்ப ஒழுகும் மெல்லிய பண்புடையான்; அறிவன அறிந்த அறி வுடையான்; வாயில் வந்து வருங்கி இரப்பார்கம் வரிசை

யறிந்து, வரையாத வழங்கும்.வள்ளன்மையான் :