பக்கம்:சங்க கால மகளிர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

56

ராசனது 26ஆம் ஆட்சியாண்டிற்குரிய (reignal year) பிரம தேயக் கல்வெட்டுக் கூறுகின்றது.' 136

கணவன் இறந்ததும் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழும் மகளிர் ஆளில் பெண்டிர்'137 என வழங்கப்பட்டனர். தங்களைப் பாதுகாத்தற்கு ஆளில்லாதவர்கள் என்பது இதன் பொருளாகும். பருத்திகொண்டு பஞ்சுநூற்று அதன் வருவாய் கொண்டு வாழ்ந்ததனால் இவர்கள் "பருத்திப் பெண்டிர்'138 என்றும் வழங்கப்பெற்றனர். கணவன் இறந்த பிறகு அணி கலன்களைக் களைந்துவிடுதல் காரணமாக இவர்கள் கழிகல மகளிர்'139 என்றும் கூறப்பெற்றனர். இவர்கள் தலைமயிரை மழித்துக்கொண்டனர்; இவ் வழக்கம் பண்டை நாளில் உலக முழுவதிலும் இருந்ததாகத் தெரிய வருகிறது. *140

இறந்தவர் உரம்பெறவே இருப்பவர் பயிர் மழித்தனர் என்று மேற்புல ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுவர்:"141

Sir J. G. Fraser, while discussing the reason for sharing locks as an offering for the dead, says, “still it is to be remembered that in the opinion of some people, the hair is the special seat of its owner's strength and that accordingly in cutting their hair and presenting it to the dead thay may have imagined that they were supplying him with a source of energy not less ample and certain than when they provided him with their blood to drink.” (Folk in the Old Testameft,: Paft IV: Ch. iv, p.397.)

==

136. M.E.R.

137. புறநானூறு: 125; 1.

138. நற்றினை : 353.

139. புறநானூறு: 289:14-15,

140. புறநானுறு: 25, 250, 261, 280.

141. Foikiore un the Old Testament: Part IV, ch: Hiß.

P. 377 * 1