பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பலனுண்டாமே, "எனவும் படிக்காசுப் புலவரும் பாடியுள்ளார். அவ்வாறு இருக்க, இவ் ஆய் அண்டிரன் ஒரு பாணர்க்குப் பல மாதங்கங்களை மகிழ்வுடன் ஈந்து உவக்கின்றனனே. ஒருவேளை இவன் மலையில் வாழும் பிடிகள் ஒரு சூலில் ஒன்றுக்கு மேற்பட்டுப் பத்துக் கன்றுகளை ஈன வல்லனவோ என்று கருதுவாராயினர். அப்படிக் கருதி இவனை நேர்முகமாக விளித்து, “நின்னாட்டு இளம்பிடி ஒரு சூலில் பத்துக்கன்றுகளை ஈனுமோ?' என்று வினவினர். இப்புலவர் கொண்ட ஐயம் ஓர் இளம்பிடி ஒரு சூலில் ஒரு கன்று ஈனுவதின்றிப் பத்துக் கன்றுகளைப் பரிவுடன் ஈனுமோ? என்பதோடு இல்லாமல், இதற்கு மேலும் செல்வதாயிற்று. ஆய் ஆண்டிரன் தன்னையணுகிக் கேட்பவர்களுக்கெல்லாம் யானைகளை ஈபவன் என்பதை இவ்வண்டிரன் காடும் அறிந்து, இவனை அண்டி, பாடல் பல பாடி இவ்வானைப் பரிசில்களைப் பெற்றதோ ? எனவும் கருதுவாரானார். இக்கருத்துப்பட அவர் பாடியதன் காரணம் யாதெனில், இவ்வாய்வேள் கானகம் கணக்கற்ற கைம்மாக்களைப் பெற்றிருந்தது என்பதாம். அத்தொகையின் பெருக்கத்திற்கு உவமை கூற வந்த புலவர், விண்ணில் சிறு இடமும் இன்றித் தாரகைக்கணங்கள் முழுமையும் காணப்பட்டால் எத்துணையளவு மிகுதியான தொகை காணப்படுமோ, அத்துணையளவான யானைகள் என உவமை காட்டினர்.

ஆய் அண்டிரனுக்கு உரிமையான பொதிகை மலையும், அதற்கு அண்மையதான ஆய் குடியும் புலவர்களால் பெரிதும் சிறப்புடன் வர்ணிக்கப்பட்டுள்