பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

மில்லாத காலன் கவர்ந்தனனே', எனக் கதறி அழுதனர். ஆந்தைகள் அலறுதலைக் கண்ட புலவர், “இயமனையும் இயமபடரையும் சுட்டுக் குவியுங்கள்; இவர்கள் நல்ல ஈகைப் பண்புவாய்ந்த ஆய் அண்டிரன் உயிரைக் கொண்டு போயினர்,” என்று செத்தாரை எழுந்து அவ்வெம்படருடன் போராட அலறுகின்றனபோலும், என்று தற்குறிப்பேற்ற அணியாகவும் பாடிப் பரதவித்தனர். "இனி எனக்கும் எம்போல்வாராகிய பரிசில்மாக்களுக்கும் ஆய் குடி வாழ் இடம் இன்றி, வேற்றுக் குடியில் போவது நேர்ந்ததே," என்று எண்ணி ஏங்கினர். எவ்வளவு வருந்தி யென்? ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? வாரார். அண்டிரன் பருவுடல் மறைந்தது. மறைந்ததேனும், இவன் நுண்ணுடலான புகழுடல் இன்றும் என்றும் நிலைத் திருப்பதாகும்.