பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூற்களாகும். இவற்றொடு சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காவியங்களும் பண்டை வரலாற்றை அறியத் துணைசெய்வன. தண்டமிழ் மொழியில் அறிவு பெற்றுத் தமிழ் முன்னோர் ஒழுகலாற்றை உணர விழைவோர் இந்நூற்களைப் பயின்று பேர் அறிவு பெறுவாராக.

இதனுடன் இந்நூலில் எழுதப்பட்ட கடையெழு வள்ளல்கள் இன்னார் என ஒரு சேரக் குறிப்பிட்ட இரு நூல்களில் காணப்படும் பாடல்கள் இரண்டும் பயில்வார்க்கு இன்பந்தரும் என்று எண்ணிச் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் படித்துப் பயனுறுவார்களாக.

________________