உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மகள் பாசுரங்கள் திருவாய்மொழியில் மகள் பாவனையில் ந-ை பெறும் பதிகங்கள் பதினேழு (ஆஹி: சூத்திரம் 134): இவற்றுள் தூதுப் பதிகங்களாக நட்ைபெறுபவை நான்கு." இவற்றின் விளக்கத்தை அடுத்த இயலில் காண்போம்." ஏனையவை பதின்மூன்றையும் ஈண்டுக் காண்போம். மகள் பாசுரத்தின் தத்துவம் முன்னர் விளக்கப்பட்டது." (1) வாயுக்திரையுகளும் (2.1) என்ற திருவாய்மொசி யின் அவதாரிகையில் நம் பிள்ளை அருளிச் செய்வது மேல் திருவாய்மொழியில் மணியை 1, வானவர் கண்ணனை'. 'தன்னதோர் அணியை (1-10 : 1) என்பதில் மணியை' என்பதனால் எளிமையும், வானவர் கண்ணனை' என்ப தனால் மேன்மையினையும், தன்னதோர் அணியை என்ற தனால் வடிவழகினையும் அருளிச் செய்தார். இந்த மூன்று திருக்குணங்களுள் ஒரொன்றே மேல் விழப் பண்ணுகைக்குப் 1. திருவாய் 1.4; 5.1: 6.8; 9.7 என்பவை. 2. இயல் 11 காண்க. -: 3. திருவாய் 2.1, 4.8; 5.3; 5.4; 8.5; 5.9, 6.2; 7.3: 8.2; 95; 98; 99, என்பவை. க் 4. இயல்-7 காண்க. 5. நூறு பாசுரங்கள் கொண்ட தொகையைப் பத்து. என்றும். பத்துப் பாசுரங்கள்கொண்ட பதிகத்தைத் திருவாய்மொழி என்றும் வழங்குவர்.