பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

தாகப் பாதையில் அவர்களை எப்படிக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதையும் கூறி வழி காட்டும் மணி பாங்கே கார்க்கியின் சிருஷ்டிகள்.

    இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அனைத்திலும் கார்க்கி பனிதத் தன்மையை எவ்வளவு சிறப்பாக மதிக்கிறார். உணர்கிறார் என்பதையே நாம் காண்கிறோம். சிவப்பன் என்ற கதையில் வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரத்துக்கான ஒரு யுவதியின் நரக வாழ்வின் மத்தியிலே, அவனைக் கொடுமைப்படுத்திச் சித்ரவதை செய்யும் ஒரு முரட்டு 'ரௌடி'யின் இதயத்திலே அவர்கள் இருவரது மனித உணர்ச்சிகள், காதல் உணர்ச்சிகள் எவ்வளவு தூயதாக வெளிப்படுகின்றன என்பதைக் காணமுடிகிறது. தாலாட்டும் ஒரு விபச்சாரியைப் பற்றிய கதை தான். குடிகாரியான விபச்சாரியின் அந்தரங்க மனத்தில் வெளிக்குப் புலப்பட முடியாத சந்தர்ப்ப பேதத்தால் எப்படிப் பிள்ளை பாசமும் இன்ப உணர்ச்சியும் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணருகிறோம். சந்திப்பு அருமையான காதல் கதை. பணக்கார வர்க்கத்தின் மனப்பான்மை எப்படி ஒரு இளம் பெண்ணின் மனத்தில் தன்னையும் அறியாமல் வைரம் பாய்ந்து உரமேறியிருக்கிறது, அதனால் அவள் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்ற கருத்துப் பிரதிபலிக்கிறது. வர்க்க பேதத்தை ஒழித்துக்கட்டாத வரையில் மனித உணர்ச்சிகளுக்கும் வர்க்க பேதத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு நிலவி வரத்தான் செய்யும் என்ற உண்மை புலப்படுகிறது. சங்கீதம் ஒரு போலீஸ் அதிகாரியின் மனத்தை எப்படி நெகிழச் செய்கிறது. அது போலவே ஒரு கைதி தான் தப்பித்துக் கொண்டு ஓடக்கூடிய சந்தர்ப்ப