பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


தாலேயே, அதற்குச் 'சாகாவரம்' கோருகின்றனர். அதனால் இலாபம் பெறுகிறவர்கள், பேதத்தால் வரும் இலாபம் ஒழிக்கப்பட்டால் தான் தோழமை இருக்கமுடிகிறது.

இந்தத் தோழமைதான், சமத்துவத்தின் கனி, சமதர்ம மணம், இதைக் காணத்தான் ஜாதி தொலைய வேண்டும் என்று பாரதியார் சொன்னார். அவரைப் பாராட்டுபவர்களைப் பார்த்து, நாட்டைப் பார்த்து, ஆர்வமிக்க இளைஞர்களைப் பார்த்து,

"இருட்டறையில் உள்ளதடா உலகம்
ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச்
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லையாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்."

என்று பாரதிதாசன் கூறுகிறார்.