பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


மான செயலுக்குப் பொழுது போக்குப் பயன்படுத்துகிறார்களா?

இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது--கவனிப்பாரற்றுக் கிடக்கிறது--எழில்மிக்க விதவையைப்போல.

நீர் வீழ்ச்சி--சித்திரச்சோலை--ஆறு உற்பத்தியாகும் இடம்--மலை உச்சி--சந்தனக்காடு--சிந்து பாயும் சிற்றாறு--பறவை இனங்களின் பாட்டு மொழி--புள்ளிமான்கள் துள்ளியோடும் காட்சி--யானைக்கன்றை அழைத்துச் செல்லும் கனவு. தேசிங்குக்கோட்டை சேர்வராயன்மலை பார்த்ததுண்டா என்று கேளுங்கள். கோபம் பிறக்கும்--நான் என்ன சீமானா--சம்பளம் எனக்கு 150 சார்; நூற்று ஐம்பதுதான், உல்லாச யாத்திரை செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர் என்று கண்டித்துப் பேசுவார்.

ஆனால் மிகக் கஷ்டப்பட்டு நான்கு நாட்கள் லீவு பெற்றாலும் குழந்தைக்கு மொட்டையடிக்க திருப்பதிக்கோ. அம்மா சிரார்த்தத்துக்குக் காவிரிக்கோ, புத்திர சந்தான் நிமித்தம் ராமேஸ்வரமோ போயிருப்பர், அதற்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டாலோ கோபம் கொதித்து வரும். இலக்கியம் எப்படி வளரும்? கலை மணம் எங்கிருந்து கமழும்? ஓவியக்கலை எவ்வண்ணம் ஓங்க முடியும்? நல்லிசை எங்கிருந்து பிறக்கும் ? இயற்கை தரும். களிப்பைக் கண்டு மனதிலே கலையுணர்ச்சியைப் பெறாவிட்டால் வசதியுள்ள மிகமிகச் சிறு கட்டமும், ஓய்வு நேரத்தைத் தக்கபடி பயன்படுத்தி தருகிறது.

அலுத்துத் தூங்கும் அந்த ஆலைத் தொழிலாளி, காலையிலே எழுந்ததும், கதிரவனைக் கண்டு களித்திடும் கமலத்தைக் காணப் போவதுமில்லை. இரவு நிலவின் அழகினைக் களித்து விட்டுப் படுத்தவனுமல்ல--அதோ சற்று தொலைவாகப் படுத்திருக்கும் மாது--அவன் தர்ம பத்தினி அவளிடம் உதிர்ந்த கண்ணீரைத் தான் இரவு படுக்கும் போது பரிசாகம் பெற்றான். அந்தப் பரிசும் சுலபத்திலே அவனுக்குக் கிடைத்து விடவில்லை. காலை முதல் ஆலையில் பாடுபட்டு அலுத்துப்போன கரத்துக்கு வேலை கொடுக்கி-