பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


கிறோம், புதுப்பிக்கிறோம், பயனுள்ள தாக்குகிறோம். இந்த சமுதாயம் திருத்தி அமைக்கக்கூடிய, திருத்தி அமைத்தால் பண்பும் பயனும் தரக்கூடிய நிலையில் தான் இருக்கிறது.

சுக்கு நூறாகி விட்டகலம், கடலடி சென்று, ஆண்டு பல ஆன பிறகும், விஞ்ஞானக் கருவிகள் மூலம் கடலடி சென்று, கலத்தின் பகுதிகளையும், அதிலிருந்த பொருள்களையும் எடுத்து வரும் பெரு முயர்ச்சியில், மேலை நாட்டவர் வெற்றிகரமாக ஈடு படுகிறார்கள் என்றால் ஒரு காலத்தில் உன்னதமான நிலைமையில் வாழ்ந்து, உலகிலே உயரிடம் பெற்று திகழ்ந்து, இடைக்காலத்திலே எத்தரின் பிடியிலே சிக்கியதால் சீரழிந்த நாட்டையும், சமுதாயத்தையும் புதுப்பிப்பது ஏன் சாத்யமாகாது? இந்தத் தளராத நம்பிக்கைத் தான் மறுமலர்ச்சி இயக்கத்திலே பணி புரிபவர்களுக்கு உள்ள பெரியதோர் துணை.

கடந்த பத்தாண்டுகளிலே, நாடகத் துறையிலே ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால் மறுமலர்ச்சி இயக்கத்தின் வேகமும் வெற்றியும் விளக்கமும் தெரியும்.

நாடகம்:--இன்று நள்ளிரவுச் சத்தமல்ல--நடையாலும் உடையாலும். விழியாலும் மொழியாலும், அரைத்தூக்கத்திலிருப்பவர்களுக்கு ஆனந்தம் தர முயற்சிக்கும், வெறும் ஆடல் பாடல் அல்ல! நாடகம், இன்று நாட்டுக்கு ஒரு நல்லரசனாக முன் வந்திருக்கிறது--துணிவுடன்

'ரிஸ்ட்வாச்' கட்டிய கரத்துடன் அசோக வனத்திலே அழுது கொண்டிருக்கும் சீதையை, போலோ காலர் சர்ட்டும். பொன் முலாம் பூசிய பல்லும், பாலிஸ் போட்டஸ்லிப்பரும் தங்க நிற பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியும் தரித்துக் கொண்டு வரும் கோவலனையும், ஓரடி பாடிடும் அனுமானையும் இன்று நாடக மேடைகளிலே அநேகமாகப் பார்க்க முடியாது--ஏராளமான பொருட் செலவில் ஒருவரிருவர், இந்தப் பழங்கால சின்னங்களை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்--பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த இந்த நாடகக் காட்சிகளை இன்று பார்க்க