பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


வர்கள், முள்ளில் ரோஜா, மணமகன், கைதி, அந்தமான் கைதி, எதிர்பாராதது, பலிபீடம், தொழிலாள், சிறைச்சாலை, மறுமணம் இப்படிப் புதிய புதிய நாடகங்கள் எல்லாம். மனித இயல்புகளை நிலைமைகளைப் படம் பிடித்துக்காட்டும் புதுமை நாடகங்களாக நடத்தப் படுகின்றன! பத்தாண்டுகளுக்கு முன்பு, பத்தினிப் பெண்ணின் பண்பை விளக்க, அவள் மாண்டு போக வேண்டும், நாடகத்தில்--இப்போது தவறி விட்டாள் ஒருத்தி என்றால், ஏன் என்று அனுதாபத்துடன் ஆராய்கிறான் கணவன் நாடகத்தில்!--நான் குறிப்பிடுவது ஒன்று புராணம், மற்றொன்று சமூக நாடகம் கூட அல்ல, இரண்டும் சமூக நாடகங்களே. இரண்டும் ஒரே நாடகக் கம்பெளியாருடைய நாடகங்கள்! பத்தாண்டுகளுக்கு முன்பு, பத்தினிப்பெண் மாள்கிற முறையிலே கதை அமைத்தால் தான் முடியும் நாடகம் நடத்த--அதற்குமேல் ஜீரணமாகாது! எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, அந்தக் கதையைப் பற்றி. நடிக நண்பருடன் பேசிக் கொண்டிருந்தது-- ஏன் அந்தப் பெண் இறந்து பட தேண்டும்--வாழட்டுமே, வாழ்ந்து காதலை மதிக்கத் தெரியாத கயவனுக்குப் புத்தி புகட்டட்டுமே, அதுபோலக் கதை இருந்தால் என்ன என்று கூறினேன்--நாடு ஏற்குமா, ஏற்காதா என்பதல்ல பிரச்சினை அவரே அதை ஏற்கத் துணியவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கம்பெனியில் சூழ்நிலையால் தாக்கப்பட்ட தையலின் துயரக் கதையை நடத்திக் காட்டும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது சாவு அல்ல--மன்னிப்பு--அதுவும் கணவனால்--அதிலும் அவன் தேவன் என்பதால் அல்ல--மனிதன் ஆகையால்!

இவ்வளவு மகத்தான மாறுதல் நாடக மேடையில்.

தவறிவிடும் மனைவி, துரோகமிழைக்கும் நண்பன் இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் மன்னிப்புத் தருவது தான் மறுமலர்ச்சி என்று நான் கூறுவதாகக் கருதி விட வேண்டாம். அப்படிப்பட்ட மனிதர்களை-- குடும்ப நிகழ்ச்சிகளைக் காட்டி. சமுதாயச் சூழ்நிலையை விளக்கும் நாடகங்கள் இன்று நாட்டிலே நடத்தப் பட்டு பொதுமக்களின் பேராதரவைப் பெறுகின்றன என்றால், அதன் பொருள் என்ன