பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


விட்டான் இந்தப் பயல்" என்று வெறுத்துப் பேசும் பெரியவர் ரூபத்தில், "மகாப் பெரிய மேதாவி" இவர் புதிதாக் கண்டுபிடித்துவிட்டார் என்று கேலி பேசும் நண்பர் உருவிலே. இப்படியெல்லாம் காட்சி அளிப்பான் அந்த மாயாவி--அதாவது பழமை அதை எதிர்த்துப் போரிட, உறவு கொண்டாடி ஆசைமொழி கூறுமானால், அதிலே மயங்காதிருக்க வாலிபர்களுக்குத் திறமை தேவை.

நம்மைச் சுற்றி என்ன காண்கிறோம் இன்று. அதோ மெருகு குலையாத மோட்டார் ஓடுகிறது. நாகரிகத்தின் சின்னம். உண்மை உள்ளே உல்லாசச் சீமான். செல்வம் சுகம்; சுகத்துக்காகச் செல்வம்; சுகப்பட்ட செல்வவான் சரி, மோட்டார் ஓடட்டும்; அதோ எதிர்ப்புறம் காண்பதென்ன? மாட்டுக்குப் பதில் மார்பு உடைய இழுக்கிறான் பாரவண்டியை ஏழ்மை உழைப்பு; உழைப்பனை ஏழை. உல்லாசச் சீமான் மோட்டாரில் செல்கிறான். சல்லாபியின் வீட்டுக்கோ--இல்லை-- ---சாம்பமூர்த்தி சன்னதிங்கோ.

இந்தக் காட்சி சுதந்திர இந்தியாவில் இருந்துதான் தீருமா? அதோ ஓர் கூட்டம்; ஜிவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்புப் பற்றிய பிரசங்க பூஷ்ணம் பேச்சானந்தர் சரமாரியாகப் பேசுகிறார், பேசட்டும் காண்பதெல்லாம் மாயை, பூண்பதெல்லாம் மாயையேகாண். பாடுகிறார், கல்யாணி ஆலாபணம் கைவிரவிலே கவனியுங்கள், ப்ளூ ஜாகர் வைரம், பக்கத்திலே வெள்ளிச் செம்பு, கற்கண்டு பொடி போட்டுக் காய்ச்சிய பசும்பால் உள்ளே. பேசும் பொருள் கவனமிருக்கிறதோ? மாயா வாதம்.

சுந்தர இந்தியாவிலே இது இருக்குமா?

சீமான் ரசித்தார், மாயாவாதப் பிரசங்கத்தை--வீடு வந்தார்--வேலையாள் அவருடன் வந்தவன், ஒரு அடி பாட்டிலே கற்றுக்கொண்டான். மெல்லிய குரலிலே பாடுகிறான்.

"காயமே இது பொய்யடா," என்று.....எஐமானர் காதிலே இது விழுகிறது. அவர் உரத்த குரலிலே கூப்பிட்டுக் கட்டளையிடுகிறார்.