பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


இளைஞர்களின் மனதைக் கவரக்கூடிய மகத்தான சாதனத்தைப் பெற முடியாமற் போய்விட்டது.

அபட், எழுதிய 'நெப்போலியன் வரலாறு,' கிப்பன் எழுதிய ரோம் சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் எனும் இரு ஏடுகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன.

அடிமைத் தளையிலிருந்து விடுபட வீர போர்ப் புரிந்த நாடுகளின் வரலாறுகள், அவைகளிலே இடம் பெறும். ஆற்றல் மிக்கோரின் வாழ்க்கைக் குறிப்புக்கள். ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் சொந்த வாழ்க்கையில் வறுமைத் தேள் கொட்டினாலும், பழி எனும் பாம்பு கடித்தாலும், பதறாமல், சலிக்காமல், விடுதலைப் போர் நடத்திய வீரச் செயல்களைப் படிக்கும்போது, கோழையும் வீரனாகிறான்--கூனனும் சற்று நிமிர்ந்து நிற்கிறான். சைமன் போலீவர் காரிபால்டி, ஆகியோர் பற்றிய புத்தகங்கள். என்னைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. அதே முறையிலே தீட்டப்படவில்லை என்ற போதலும், சிந்திச் சிதறிக்கிடக்கும் அளவிலேயும், 'கட்டபொம்மு,' 'தேசிங்குராஜன்' ஆகியோரின் கதைகளும், 'நரசிம்ம பல்லவன்' காலத்தில் காஞ்சிபுர பம்பாய் அருகேயுள்ள வாதாபி எனும் நகர்மீது படை எடுத்துச் சென்று. சாளுக்கிய மன்னன் 'புலிகேசி'யைத் தோற்கடித்த பரஞ்சோதியின் பேராற்றல் பற்றிய சிறு குறிப்புக்கள். என் மனதைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

நாடு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலே, விடுதலை வீரர்களின் கதைகள் மனதைக் கவரும் அளவுக்கு, விருதா கிடைத்தான பிறகு, அதே வகை ஏடுகள், உள்ளத்தைக் கவருவதில்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது மாம்பழம் சாப்பிடுவது போலாகி விடுகிறது.

பொதுவாகவே. வீரத்தைக் கண்டு வியந்திடும் பருவத்தைத் தாண்டி, வீரத்தாள் விளைந்தது என்ன என்று கணக்கிடும் பறுவம் செல்கிறோம், மீண்டும் புத்தகப் பட்டியல் மாறுகிறது. அந்நிலையில் வீரர்களின் வரலாறுகளைவிட நீதிக்காகப் போராடியவர்கள், மேட்டுக் குடியினரின் அட்டகாசத்தை எதிர்த்து நின்றவர்கள், புனிதப் போர்வை-