பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


எனவே, மனிதருக்குள் பேதத்தையும் அச்சத்தையும் மூட்டக்கூடிய, வளர்க்கக்கூடிய எந்த ஏற்பாடும், சுதந்தரத்தின் பரம விரோதிகளே.

ஜெபமாலை, இரும்புப் பெட்டி, எதைக் கருவியாகக் கொண்டாலும், சரி, இவைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமட்டும் மனித சுதந்தரம் பறிக்கப்பட்டுத்தான் போகும். இத்துடன், மக்களாட்சிக் காலத்திலே கூர்மையாகிவிட்ட, பேனா. முனையும் சேர்ந்துவிட்டால், சுதந்தரத்தை சுலபத்திலே குறையாடிவிட முடிகிறது.

பேச்சுச் சுதந்தரம், எழுத்துச் சுதந்திரம். மதச் சுதந்தரம்; ஏட்டில் இருக்குமளவுக்கு நடை முறைக்கு வருவதில்லை.

சொல்லுகிறபடி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்க்கும், சொன்னபடி செய்யக்கானோம் ஏன்? என்று கேட்கும். விழுப்புணர்ச்சி மக்களுக்கும் ஏற்படவேண்டும். இந்த ஆளவந்தார்களைப் போல மக்களைச் சீர்கேடான முறையிலே நாங்கள் நடத்த மாட்டோம்; சுதந்திரத்தை பறிக்க மாட்டோம் எம்மை ஆட்சியாளராக்கினால் என்று கூறி, பொது மக்களின் ஆதரவைத் திரட்ட மற்றோர் கட்சி இருக்கிறதென்றால்தான் ஆள்பவர்கள் மக்களின் சுதந்தரத்தை மதித்து நடக்க முன் வருவார்கள்.

இவைகளைச் சாதிக்க, மக்களுக்கு உள்ளத்தில் உரம் வேண்டும். உணவு, உடை, உறைவிடம் எனும் இம்மூன்று அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கே உடலும் உள்ளமும் உருக்குலையும் அளவு பாடு பட்டால் தான் முடியும் என்ற கேவல நிலையில் மக்கள் இருந்தால் அவர்களுக்கு உள்ள உரம், எப்படி ஏற்படும்.

அரிசிப் பஞ்சமும் அமெரிக்கா நாட்டுப் பிரச்சினையும் ஒருசேர மக்களின் முன் வந்து நிற்கும்போது, அமெரிக்கத்-