பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


அன்பையும்--அன்னத்தையும் ஒன்றாகக் கலந்து. வானத்திலுள்ள நிலவையும் காட்டிக் குழந்தைகளுக்குத் தாய் சோறிடும் போது, குழந்தையும் நிலைவைப் பார்க்கிறது. ஏதேதோ எண்ணத்தான் செய்கிறது. மழலை மொழியில் ஏதேதோ சொல்கிறது. ஏதேதோ கேள்விகளைக் கேட்கிறது.

யாரம்மா இவ்வளவு அழகான விளக்கை அவ்வளவு உயரத்திலே ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த ஒரு விளக்கைச்சுற்றி ஏனம்மா அவ்வளவு சிறு சிறு விளக்குகள் உள்ளன? என்று கேட்கிறது.

அம்மா அந்தச் சந்திரனைப் பிடித்துத் தா? நான் பந்தாட வேண்டும் என்று கேட்கிறது இன்னொரு குழந்தை. நிலவையும் பார்த்துவிட்டுத் தன் அன்னையின் திருமுகத்தையும் பார்த்து, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறது இன்னோர் குழந்தை.

குழந்தை உள்ளத்திற் குமுறி எழும் எண்ணங்கள் வேடிக்கை யானவை--ஆனால் முடிவுகளல்ல; ஆசை அலைகள் அவை, மனித சமுதாயத்தில் குழந்தைப் பருவத்திலேயும் இதேபோலத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும். இயற்கைக் காட்சிக்கும் ஏதோ ஒரு வகையான காரணம் தேடி அலைந்து, பலப்பல விசித்திரமான காரணங்களை, விளக்கங்களை மனித சமுதாயம் எண்ணிற்று--பேசிற்று--நம்பலாயிற்று.

மனித சமுதாயத்தில் பாலப் பருவத்தில் கிடைத்த பல உண்மைகள். இன்று உண்மைகள் என்று உலகினரால் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை. பர்மாவை ஜப்பானியர் பிடித்தபோது, அவர்கள் வெளிட்ட நோட்டுகள் எப்படி இன்று பர்மாவில் செல்லுபடியாகாதோ, அதுபோலச் செல்லுபடியாகாத நோட்டுகளைச் சேகரித்து வைத்துச் சிறு பிள்ளைகள் விளையாடினால், கேடு அதிகம் இல்லை; அந்த நோட்டுகள் செல்லுபடியாக வேண்டும் என்று வாதாடினால், நாட்டுக்கு எவ்வளவு பெரிய தொல்லை. அதுபோல மனித சமுதாயத்தின் சிறுபிள்ளைப் பருவ எண்ணங்களை--ஏற்பாடுகளை--தத்துவங்களை--விளக்கங்களை இன்-