பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


யும் வளர்ந்துகொண்டு இருக்கவேண்டும்--பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால் வாள் மட்டும் போர் குளித்துவைத்துக்கொண்டு. கேடயம் தேடாமல் இருப்பதோ, விற்களைக் குன்றெனக் குவித்துக்கொண்டு அம்புகள் இல்லாமலிருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்து வைத்துக்கொண்டு, வெடி மருந்து தேடாமனிருந்து விடுவதோ, அவை யாவும் ஒழுங்காகவும் தேவைக் கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுள்ள வீரர்கள் இல்லாதிருப்பதால், வீரர்கள் இருந்தும், இவர்கள நடந்திச் செல்லும், தலைவன் 'இல்லாதிருந்தால். பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலைபோல் இருக்குமே தவிர பயன் தரும் மனிதராக இருக்க முடியாது.

ஸ்தாபனம். ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகிறது, ஸதாபனம், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகிறபோது, அந்த ஸ்தாபனம் ஆற்றல் பெறுவதைப் பொறுத்தே இருக்கிறது. கொள்கைகள் ஏற்படுவதே உள்ள குறைகளைத் தீர்த்துவைப்பதற்கோ, நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கோ, புதிய தோர் நலனைக் காண்பதற்கேதான். தொழிலாளர்களின் ஸ்தாபனம், சில அடிப்படைக் கொள்கைகளின்மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால் தொழிலாளர்களின் சில பல குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்குத்தான்.

பதினெட்டம் நூற்றாண்டுக்குப் பிறகு, தொழில்முறை மாறிவிட்டது. உலகிலே, அதற்கு முன்பு எந்த நாட்டிலும், குடிசைத் தொழில் முறையும், தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்திச் செய்து கொள்வது மட்டுமே இருந்து வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின்போது, தொழிற் புரட்சி ஏற்பட்டுக் குடிசைத் தொழில் முறை