உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


“அம்மொழி தேறினீர்போய் இறைமகன் அவையத் தேறிச்
செம்மையிலாரை வாது செய்திர்நீர் அனையார் தோற்று
வெம்முனைக் கழுவிலேறி விளிகுவர்” என்னக் கேட்டு
மைம்மலி களத்தான் மைந்தர் தொழுதுதம் மடத்திற்போனார்.

சம்பந்தரும், அமைச்சரும், அரசியும் அரசனும் சூழ்ச்சி செய்தனர். பெண்டு பிள்ளைகள் சமணரைப் பழித்தனர். “திருநீற்றுக்குத் தோற்றீரே” என எள்ளி நகையாடினர். வழக்கிட எழுந்தனர் சமணர். "தீக்கனாக் கண்டோம், செல்லாதேயும்" எனத் தடுத்தனர் பெண்கள். கேளாராய் அரசமன்றம் வந்தடைந்தனர் அமணர்; தீ வழக்கில் தோற்றனர்; புனல் வழக்கு வேண்டினர்; தோற்றால் கழுவேறவும் உடன்பட்டனர்; உடனே கழுக்கள் செய்யப்பட்டன.

ஊழின் வலியாலமணர் அதற்கு உடன்பட்டார்க ளஃதறிந்து
சூழியானைக் குலச்சிறையுந் தச்சர் பலரைத் தொகுவித்துக்
காழினெடிய பழுமரத்திற் சூலவடிவாக் கழு நிறுவிப்
பாழி நெடிய தோள்வேந்தன் முன்னே கொடுபோய் பரப்பினார்.

சம்பந்தர் அவர்களைச் சைவராய் உய்யுமாறு வேண்டினார். அது கேட்டு அவர்கள் கொதித்து உரைத்தனர்.

முன்பு தீயில் வென்றனமே நீரில் யாதாய் முடியுமென
வன்பு பேசியிணக்கி அகல நினைந்தாய் அல்லதை நீ
பின்புவாது செயத் துணியும் பெற்றியுரைத்தாய் அல்லை புலால்
என்பு பூணியடிமை அடைந்த ஏழாய் போதி எனமறுத்தார்.

புனல் வழக்கிலும் தோற்றனர் சமணர். சம்பந்தர்,