உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


கின்றது. பெரும்பற்ற புலியூர் நம்பியோ, அனல் வழக்கும் புனல் வழக்குமே வழக்காகும் என எண்ணி வெப்பொழித்த பின்னரே, சம்பந்தர் இறைவனருளை வேண்டி விடை கேட்பதாகப் பாடுகின்றார். “வாது செயத் திருவுள்ளமே” என்ற பதிகங்கள் இரண்டுண்மையால், ஒன்று வெப்பு ஒழிப்பதன் முன் பாடியது என்றும், ஒன்று அதன்பின் பாடியதென்றும் குறிக்கின்றார் பரஞ்சோதியார். சம்பந்தர் பெருமையை, அரசியும் அமைச்சனும், மறையோனால் அறிதல் முதலிய பல வேற்றுமைகளும் காணக்கிடக்கின்றன. ஆனால், இக்கதையின் உயிர்நிலையான கழு ஏற்றிய செய்தியைப் பற்றிய வேற்றுமைகளே இங்குக் குறித்துரைக்கத் தக்கன. இதனையும் ஆராயும் போதுதான் சேக்கிழாரின் பெருமை புலனாகிறது. கழுவேறிய கதை ஒரு கொலைக் கதை. அதனைக் கற்போர் மனம் நோகாதவாறு எங்ஙனம் கூறுவது!

இந்தச் சிக்கலான முடியை எளிதில் அவிழ்த்தருள்கின்றார் சேக்கிழார். நம்பியாண்டார் நம்பி கூறியபடி கழுவேற்றியவர் சம்பந்தரே ஆவர். பெரும்பற்றப் புலியூர் நம்பியும் அவரையே அப்பணிக்குத் தலைவராக்குகின்றார்; கழுவேற்றும் எண்ணம் சம்பந்தர்க்கே முதன் முதல் தோன்றியதெனப் பாடுகின்றார். அரசிக்கும் அமைச்சருக்கும் அனுப்பிய விடையில், கழுவேற்றி விடுவதாக உறுதி கூறுகின்றாரன்றோ சம்பந்தர்? அது நோக்கிக் குலச்சிறையார் கழுமரங்களை