உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


மேல் படுத்திருக்கிறாள். கடவுள் மகளிர் வருகின்றனர். காளி கலைமகளை நோக்கி, "என் மருமகள் வள்ளி வதுவை மனமகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியதொருகதை சொல்லு" என்று அக்கதையில் ஈடுபட்டு விரும்பிக் கேட்கிறாள். "இந்தக்கதை அமணர் கழுமிசை கொள்ளும் கதை" என்று கூறித் தொடங்குகிறாள் கலைமகள். இதற்குப் பொருளெழுதிய பழைய உரை யாசிரியர், "கழுமிசை கொள்கையாவது யானை மேல் கொண்டார் என்பது போல உயிர்க்கழு ஏறுகை. இதுதான் அமணர் கழுவைத்தொத்தப் பிள்ளையார் கொல்லாதே விட்டருளினாரென்னுங் கதை. “அமணர்தாம் கழுவேறுதற்குக் காரணம் பொய் சொல்லா விரதமென வுணர்க” என்று எழுதுகிறார்.

இது ஒரு புதிய கோணத்திலிருந்து காணும் காட்சி. ஆதலின், இதனைத் தொடர்ந்து சென்று காண்போம். சீகாழியிலிருந்து மதுரைக்குச் செல்கின்றார் ஞானசம்பந்தர்; அதன் மதிலுக்குப் புறம்பாக ஒரு மடத்தில் தங்குகிறார். அம்மடத்தை அமணர்கள் கொளுத்துகின்றார்கள். அந்த நெருப்பு அரசனைச் சுடத் "திருவாய்மலர்ந்தது பிள்ளையே." உரையாசிரியர் இதற்கொரு காரணங் கூறுகிறார். பின்னே வந்தவர்கள் இக்கதையை எவ்வாறு உள்ளத்தே கொண்டார்கள் என்பதற்கு இந்த உரையாசிரியர் குறிப்பே சான்றாகும்."அமணர் நிற்க அரசர் மேலே நெருப்பு ஏவினது இராசாக்கினை இல்லையோவென