உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

________________


இருப்பு நிலையை நோக்காதபோது உண்மைத் தன்மையும் இல்லையாம்: இவை மூன்றும் ஒன்றற்கு ஒன்று துணையானவை; முரண்பாடின்றி ஓரினமாக நிற்பவை. எனவே, சமணமதத்தின்படி எல்லாம் நிலையாயினவாம்; எல்லாம் மாறுவனவாம்.

இந்த வகையில் எல்லாப் பொருள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாம். என-வே, ஒரு பொருளின் சிறப்பு வடிவத்தை அறிய வேண்டுமானால், அப்பொருளும் பிற பொருள்களும் ஒன்றோடொன்று இயைந்த தொடர்பினையும் அறிதல்வேண்டும். ஒரு பொருளைக் குடம் என்று பேசுவோமானால் பிற எல்லாவற்றினின்றும் அதனை வேறு பிரிக்கின்றோம். குடமல்லாத பிறபொருள்கள் குடத்தோடு இயைந்த இபைபு அங்கே விளங்குகிறது. மக்கள் என்றால் மக்கள் அல்லாதவர் என்ற எண்ணமும் பிறக்கிறது. எனவே, ஒன்றை அறியும்போது அதனை மற்றவற்றோடு முறைமைப்படுத்தியே அறிகிறோம். "ஒன்றை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிகிறான். எல்லாவற்றையும் அறிந்தவன் ஒன்றை அறிகிறான்" என்று மகாவீரர் கூறுகிறார். (ஆசாராங்க சூத்ரம் 1. 3. 1. 122)

“காரணந்தான் உள்ளது; காரியம் நிலையாக உள்ளது அன்று, புதிதாக எழுவது” என்று கூறுவோர் சாங்கியர் முதலானோர். "காரியம் முன் இல்லாதது; அசத்து” என்று கூறுபவர் புத்தர் முதலானோர். காரியமும் காரணத்திலே=