பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

________________


“அஞ்சு புலன் வென்றறுவகைப் பொருன்
       தெரிந் தெழு இசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கள் மேவிநிகழ்
       கின்றதிரு வேதிகுடியே” (3644)

"குறிகலந்த இசை பாடலினானசை
       யாலிவ் வுல கெல்லாம்
நெறிகலந்த தொரு நீர்மையன்" (12)


என்று கூறுவதும் காண்க.

"தானலா துலகமில்லை" (4551) “உலகலா துடையதில்லை" (4560) என்ற கொள்கைக்கு இணங்க இயற்கையை இறைவனாகக்கண்டு பதிகங்கள் தோறும் இயற்கையையே பாதிக்கு மேல் பாடி வருகின்றார் ஞானசம்பந்தர்.

இயற்கையையும் உலகத்தையும் பாடும் போக்கினை - வெறும் நிலையினையே- புலவோர்களை வெறுக்கும் அங்கதமாகச் சமணர்கள் பாடினார்கள் எனலாம். இனி அவ்வாறன்றி உலகத்தவர்களைப் பாடுவதனையே சமணர்கள் பழித்தார்கள் என்றும் கொள்ளுதல்கூடும். இப்படியானால் சுந்தரர் முதலோரும் (7564-7574) இவ்வாறு பாடுதலின் சமணர்களை மட்டும் பழிப்பதில் பொருளில்லை எனலாம்.

V. கழி மீன் கவர்தல்

சமணர்கள் ஊன் உண்ணாதவர்கள். தாம் கொலை செய்யாதபோது பிறர் கொணர்ந்த ஊனை உண்ணுதல் தவறு அன்று எனப் பெளத்தர்கள் கொண்டார்கள் என்பர் சமணர். இவர்களை நோக்கியே திருவள்ளுவர்,