உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

________________


என்ற இடத்தில் காண்க. "துவர்க்கா- யொடு சுக்குத் தின்னும் நிலை அமண்" (63) என்று கூறுவதும் காண்க. ஆனால் “கருகுமுடலார் கஞ்சியுண்டு கடுவே தின்று உருகு சிந்தை யில்லா." (2165) என்று பாடுவதில் முதல் வரும் குறிப்புச் சமணரைப்பற்றியது என்றும் இரண்டாவது பெளத்தர்களைப் பற்றியது என்றும் கொள்ளுதல் கூடுமோ? அவ்வாறானால் கடுத்தின்னுதல் இருவர்க்கும் அன்றோ ஆம். இவர்களை வேறு பிரியாது ஒன்றாக்கிப் பழிக்கின்றார் சம்பந்தர் என்று கொள்ளுதலும் கூடும்.

"கழியருகு பள்ளியிடமாக வருமீன்கள் கவர்வாரும்
வழியருகு சாரவெயினின் றடிசிலுள்கி வருவாரும். (3683)

என்பது மீன் கவர்வதைப் பற்றிய இரண்டாவது குறிப்பு. இங்கே முதல்வரி பௌத்தர்களையும் இரண்டாவது வரி சமணர்களையும் குறிக்கும் என்பதில் ஐயமில்லை. மூன்றாவது குறிப்பு.


கழிக்கரைப் படுமீன் கவர்வாரமண்
அழிப்பரை யழிக்கத் திருவுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
மழுப்படை யுடை மைந்தனே நல்கிடே. (3307)

இந்தப் பதிகம் முழுவதிலும் ஞானசம்பந்தர் அமணரோடு வாதிடுவதற்கு ஆண்டவன் திருவுள்ளம் ஒவ்வுமோ என அவன் அருட்குறிப்பை நாடி நிற்கின்றார்.எனவே, இப்பாடல் முழுவதும் அமணர்களையே குறிப்பதாகக் கொள்ள இடம் உண்டு. என்றாலும், இதுவோ பதிகத்தின் பத்தாம் பாடல். பத்தாம் பாடல்கள் தோறும்