உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


வேர்த்த மெய்யுருவத் துடைவிட் டுழல்வர்களும்
போர்த்த கூறைப் போதி நீழலாரும்.

துவராடையர் தோலுடையர்கள். (1-36)

“உடற்குடை களைந்த வருடம்பினை
மறைக்கும் படக்கர்கள்” (2-16)

“உண்டுடுக்கை யின்றியே நின்றூர் நகவே திரிவார்
கண்டுடுக்கையின் போர்த்தார்” (1-65)

ஆடையொழித்தங் கமணே திரிந்துண்பாரல்லல் பேசி,
மூடுருவ முகந்தார்.

செந்துவ ராடையினாரும் வெற்றரையே
திரிபுந்தி யிலார்களும்.

மிடைபடு உடையினை விட்டு ளோரும்
உடல் போர்த்துளோரும்.

உடை நவின்றாருடை விட்டுழல்வார்;

வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
யுற்றரை யோர்கள்.

தூசு புனைதுவராடை மேவும் தொழிலாருடம் பினிலுண்
மாசு புனைந்துடை நீத்தவர்கள்.

நீறுமுடை கோவண மிலாமையிலோவிய தவத்தவர்
பாறு முடன் மூடு துவராடையர்கள்.

உடை துறந்தவர்களும் உடைதுவராடையரும்,

துற்றரையர் துவராடையர் துப்புர வொன்றிலா
வெற்றரையார்.

என வருதல் காண்க.

தோலுடையார் என்பது நகைச்சுவை ததும்புமொரு சொற்றொடர். உடையைத் துறந்தததாகப் பறைசாற்றி வெளிவந்த இன்-