உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


எனினும் இத்தகைய நிலைகளின் அடிப் படையை மறந்து புறக் கோலத்தையே வற்புறுத்துவது இயல்பாகிவிடும். புறத்தையே நோக்கினால் அகநிலையின் உண்மை மாறி உள்ளம் வெம்பும். தீயன ஒழியாது உள்ளோடி மறையும்; அற்றம் பார்த்து ஆளைக் கவிழ்க்கும். இந்த நிலையையே சம்பந்தர் மறுத்துரையாடுகின்றார். இந்த நிலை எந்த மதத்திலும் எழலாம். உடல் நலத்தால் மன நலம் சீருறுவதனை சிலர் அறியார் போலும். இவ்வாறு அழுக்கிற் புரளுவோர், அயலார் அனைவோர்க்கும் நஞ்சாகி அன்றோ முடிகின்றனர்? அழுக்கிலன்றோ பல நோய்களும் விளைகின்றன? இத்தகையார் மக்களனைவர்க்கும் பகையாயினர்; மறலியாயினர். ஊத்தை வாயொடும், பாசிப் பல்லொடும், கொதுகறாக் கண்ணொடும், மாசு படிந்த உடலராய் உலவினால் யார் கண்தான் பொறுக்கும் ? ஊத்தை ஒழியச் சுக்குங் கடுவுந்தின்றனர்; உடல் நாற்றம் ஒழிய கருப் பொடி பூசினர். இதனால் மாசு கழியுமோ?

மாசேறிய உடலர் அமண் கழுக்கள்,
மூசு கருப்பொடியாரும்,
மாசடைந்த மேனி யாரும்,
கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக்
கஞ்சியை உண்டாங் கவர்கள்.
தூமெய் மாசு கழியார்
கருப் பொடி யுடற் கயவர்.
ஊத்தை வாய்ச் சமண் கையர்.
மாசுடம்பினர்.
கருகு முடலர்
குளித்துறாவமணர்.