பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


தான் சொல்லக்கூடும். அத்தகைய உடலோடும் பெண்களெதிர் வந்து ஐயம் ஏற்றுண்பதை எவரே கண்டு களிப்பார்?

வேர்த்த மெய்யர் உருவத்துடை விட்டுழல்வார்
தூய வெயினின் றுழல்வார்,
புற்றேறி யுணங்குவார்.
வழியருகு சாரவெயில் நின்றடிசில்
உள்கி வருவார்.
வேர்வந் துறமா சூர்தர வெயில்
நின்றுழல் வார்.

என வருதல் காண்க. இவர்கள் வெறுங் கட்டை போல் வெயிலில் நிற்பது கண்டும் மனம் இரங்குகின்றார் சம்பந்தர்.

தறி போலாம் சமணர்.

எனப் பாடுதல் காண்க.

V

உணவு கொள்வதிலும் சில கட்டுத் திட்டங்களைச் சிலர் ஏற்படுத்தி இருந்தனர். வீட்டு நெறி நிற்பவர் கையிலேயே உண்ணுதல் வேண்டும் என்றனர் சமணர். மண்டையிலேயே (திருவோடு) உண்ணுதல் வேண்டும் என்றனர் பௌத்தர். நண்பகல்(உச்சி)ஆவதற்கு முன்னரே உண்ணுதல் வேண்டும் என்றனர் பௌத்தர். இரவாவதற்கு முன் உண்டால் சாலும் என்றனர் சமணர். எனவே, பகலின் முற்கூறில் புத்தர் உண்டனர்; பிற்கூறில் சமணர் உண்டனர்; வாய் திறவாது தெருவூடே போகையில் யாரேனும் கையில் சோறிடின், அங்ஙனமே நின்று