உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


மண்டைக் கையர்,
கையுண லுடையர்,
நின்றே தம் கையினி லுண்போர்.
கால் நிமிந்துண்ணும் கையர்.
நின்றுண் சமணர் இருந்துண் தேரர்.
அண மிகு செல்கு சோறு கொணர் கென்று
கையிலிட உண்டு பட்ட அமணும்,
மணமிகு கஞ்சி மண்டையதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்

காலையிலுண்பவரும் (புத்தர்) சமண் கையரும்
மூடிசீ வரத்தர் முன் கூறுண்டேகுதலும் பின் கூறுண்டு,
காடி தொடு சமண்.

ஒண்துவரார் துகிலாடை மெய்போர்த்து உச்சிகொளாமை
உண்டே உரைக்கும்,
குண்டர்களோ டரைக் கூறையில்லார்.

எனப்பாடுதல் காண்க.

கடுக்கள் தின்று உடலை வருத்துவதனையும் கூறுகின்றார் சம்பந்தர். ஊத்தை யிருப்பதை உணராதிருக்கச் சுக்குத்தின்பதனை முன்னர்க் கண்டோம். பலநாள் பட்டினி கிடக்கையில் நாவில் அழுக்கேறுதலினால் சுவை உணர முடியாமற் போகின்றதன்றோ? தண்ணீர் குடித்தாலும் குமட்டுகின்றது. அந்நிலையில் சுக்கு முதலியன தின்றால்தான் தண்ணீரைச் சுவையுணர்ந்து குடித்தல் கூடும். இவர்களோ பட்டினி நோன்பிகள். பட்டினி கிடந்தே உயிர் விடுவோர் பலர்.

“பகடூர் பசிநலிய நோய் வருதலாற் பழிப்பாய
வாழ்க்கை ஒழிய, நோன்பு நோற்பவர்.”