உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


நமண நந்தியும் சரும வீரனிந்தரும சேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்று போனின்று தங்கள் கூறை யொன்றின்றியே
ஞமண ஞாஞண ஞாணஞோண மென்றோதியாரையும் நாணிலா
அமணராற் பழிப்புடையரோ நமக்கடிகளாகிய அடிகளே.

என வருதல் காண்க. சம்பந்தரும், இவர்களது மொழியாடலை,

விகட மதுறு சிறு மொழி

எனப் புனைந்துரைத்தல் காண்க.

இதுவரை நாம் கூறிவந்ததன் நின்றும் சம்பந்தர் எதனைப் பழித்துரையாடுகின்றார் என்பது தெளிவாக வில்லையா ? அவர்களில் ஒரு சாராரின் புற நிலையையே இவர் பழிக்கின்றார்; பயனிலாத புற ஒழுக்கத்தால் உடலை வாட்டுவதனையே பழிக்கின்றார்.

மனத்தகத்து அழுக்கு அறாதபோது, புறஒழுக்கத்தால் ஆய பயன் என்னை?

மாமாங்க மாடல் மணற்குவித்தல் கல்லிடுதல்,
தாமோங் குயர்வரைமேற் சாவீழ்தல்- காமங்கொண்
டாடோ டெருமை யறுத்தல் இவை யுலக
மூடம் என உணரற் பாற்று (அறநெறிச்சாரம்.)

என்றும்,

தோல் காவி சீரை துணி கீள்விழவுடுத்தல்
கோல்கா கரகங் குடை செருப்பு- வேலொடு
பல்லென்பு தாங்குதல் பாசாண்டி மூடமாய்
நல்லவரான் நாட்டப் படும் (அறநெறிச்சாரம்.)