உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


என்று தம்மைப் புனைந்துரைக்கின்றார். ஆதலின், அவர் பாட்டில் வருஞ் சொற்களை அம் முன்னோர்களது பாடலைக் கொண்டே பொருள் கொள்ளுதல் வேண்டும். "கழுக்கள்" என்ற சொல் சம்பந்தர் திருக்கடைக் காப்பிலும் பயின்று வருகின்றது.

"மாசேறிய உடலார் அமண் கழுக்கள்" (1-9-10-1)

என்று பாடுதல் காண்க.

இங்குக் கழுக்கள் என்பது எவ்வகையாலும் கழுவினைக் குறிக்க முடியாது; கழுக்குன்றம் என்பதில் போலக் கழுகு என்றே பொருள்படும். கழுகு போலக் கசிவிலாத மனத்தோடு தீனிமேல் நாட்டமாய் எதிரிகள் மேல் பாய்வது கண்டு சமணர்களையும் கழுகுகள் என்றே சம்பந்தர் இழித்துரைக்கின்றார். "காடி" என்ற சொல் "நெய்" என்ற பொருளில் எந்தப் பத்துப் பாட்டில் பயின்று வருகின்றதோ, அந்தப் பத்துப் பாட்டிலேயே, 'கஞ்சி' என்ற பொருளிலும் நெடுநல் வாடையில் “காடிகொண்ட கழுவுறு கலிங்கத்து” எனப்பயின்று வருகின்றது. அக்கஞ்சி என்ற பொருளிலேயே சம்பந்தரும்,

“காடிதொடு சமணைக் காய்ந்தார்

முதலிய இடங்களில் காடி என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்கின்றார். காடியாடுதல் என்பது "உண்டாட்டு" என்பது போல வருகின்றது. எனவே, இப்பாட்டின் பொருள்