உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


அமணர் இடப்புறத்து வெப்பு நோயை நீக்க உடன்பட்டனர். பிள்ளையாரும் வலப் புறத்து நோயை ஒழிக்க, "மந்திரமாவது நீறு" என்ற பதிகம் பாடினார். வலப்புறம் பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையிற் குளிர்ந்தது. அமணரோ இடப்புற வெப்பை நீக்க இயலாது, வெப்புறு தீத் தம்மை எரிப்ப மாசு உடலம் கன்றி, அருகு விட்டேறி நிற்பார், அறிவுடையாரை ஒத்தார், அறிவிலா நெறியில் நின்றார்.

மன்னவன் மொழிவான் "என்னே மதித்த இக்கால மொன்றில்
வெந்நரகொரு பாலாகும் வீட்டின்ப மொருபாலாகும்
துன்னு நஞ்சொரு பாலாகும் சுவையமு தொரு பாலாகும்
என் வடிவொன்றி லுற்றேன் இருதிறத் தியல்பும்

என்றான்.

"வெந்தொழில் அருகர் தோற்றீர்! என்னை விட்டு அகல நீங்கும்! வள்ளலாரே! இந்த வெப்பு அடைய நீங்க எனக்கருள்புரிவீர்" என்று சிந்தையால் தொழுது சொன்னான் பாண்டியன். பிள்ளையார் இறைவனைப் போற்றிப் பின்னுமொருமுறை தைவர, வெப்பொழிந்தது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வணங்கி உவகை பூத்தனர்.

அன்னோர், பிள்ளையாரை வாய் வழக்கால் வெல்ல முடியாதென்று நினைந்து, தீயில் நீரில் வெல்ல எண்ணினர்; தம் கொள்கையின் உயர்வைக் கட்புலனாகக் காட்ட முற்பட்டனர். "என் வெப்புநோய் ஒழிக்க முடியா தவர்களுக்கு என்ன பேச்சு?" என்றான் அரசன். அவர்களோ