உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


என்றபடி "வாழ்க வந்தணர்" என்று பாடும் வரை பொறுத்திராமல் நீறு பட்டவுடனேயே கூனும் நிமிர்ந்ததாம்.

பின்னர்க் கழுவேற்றிய திருவிளையாடல் பாடுகின்றார் வேம்பத்தூரார். எல்லோரும் கூடிச் சமணர்க்கு மாறாகச் சூழ்ச்சி செய்கின்றனராம்.

கன்னன்மொழி மடவாரும் அமைச்ச னாரும்
        காழிநகர்ப் பெருமானைத் தனிய ழைத்து
முன்னவில்வார் “உயர்ந்தசிவ சமயங் குன்றி
        முழுநிலமுஞ் சமண்மூடிற் றியாவும் வல்ல
இன்னருள்சேர் சைவசிகா மணியே! வெல்வது
        எங்ஙன்? அவர் பலர்;ஒருவர் நாம்;ம கிழ்ந்த
தென்னன்எனின் மன்னர்உளம் அறியொ ணாது
        திருவுள்ளம் அறியகிலேம்"” எனப் பணிந்தார்.

இத்தகவுஎன் நவில்கின்றீர்? “இறைஉண்டு. அஞ்சல்!
        ஏகும்” என விடுத்துமடத் தமளி மேவி
நத்தநடு எழுந்துணர்வார் “புகன்ற தொக்கும்
        நாம்ஒருவர் அவர்எண்ணா யிரவர் காணின்
மெத்தியசூழ்ச் சியும்வல் லவர்கள் தம்மை
        வெல்வதற்குப் பல்புகழ்க்கு நல்ல சொக்கன்
பத்தர்கள்பத் தனைஅல்லால் துணைவே றில்லை.
         பரசிஅவன் திருவுள்ளம் அறிவோம்” என்றே.

புறப்பட்டாராம். வெப்பொழிப்புதற்கு முன்னரே திருவுள்ளம் அறியாது, அமைச்சரும் அரசியும் அஞ்சிய போது தாம் அஞ்சாதவர்போல வெளிக்குக் காட்டி உறுதி கூறிப் பின்னர் நள்ளிருளில் தூக்கங் கொள்ளாராய் நடுங்கிக் காலையானதும் இறைவனது திருவுள்ளம் அறியச் சென்றாராம்.