உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


என்றனர். அவர்கள் தீவழக்கிலும் தோற்றனர். ஆனால், புனல் வழக்கு வேண்டினர். "அதிலும் தோற்றால் அறிவுடையாங்கள் எல்லாம் இன்றுனக்கே அடிமையாகக் கடவேம்" எனச் சூள் மொழிந்தனர். சம்பந்தரோ,

“அடிமையில் ஆசை யில்லை இன்றுநீர் அவையில் சொன்ன
படிபுகழ் வாதுஞ் சொக்கன் பரிவினால் வென்றே மாயிற்
கடிமையி னும்மை முற்றுங் கழுநுதி ஏற்று தற்கு
முடியவே ஆசை என்றார்;” இயைந்தனர் வினையான் மூடர்.

குலச்சிறையார் முன்னரே செய்தமைத்த கழுவினைக் கொண்டு வந்தார்.

உளப்படு மமைச்ச னாரை உயிர்க்கழு வினவா முன்னர்
அளப்பருந் தயாவு கூர்ந்திங் கையரே கையர் தம்மைக்
களத்தள வேற்றற் கென்றே கருதியான் முன்னஞ் சேத்திக்
குளத்துற விட்டு வைத்தே னருளினால் எனக்கொ ணர்ந்தார்.

ஆங்கது கண்டு சால அதிசய முற்று மற்றை
பாங்கில்தீ வினையான் மூடும் பாதகர்க் கருள்சு ரந்தே
“ஓங்குநன் னலங்கள் கண்டும் உணர்விலா மூர்க்கர் நீங்கள்
ஈங்கிதற் கியைந்ததென்ன காரியமெடுத்தற் கின்றே.”

“நாணிலீர் மன்னன் முன்னா நல்லசொல் கின்றேன் கண்டி
பூணும்வெண் ணீறு பூசும்; போற்றிஅஞ் செழுத்தை ஓதும்,
காணொணா முத்தி இன்பம் காணலாம்,” என்னக் கேட்ட,
கோணுறு சமணர் எண்ணா யிரவரும் கொதித்து எழுந்தார்.

புனல் வழக்கிலும் தோற்றனர்.

நேசமார் ஞான வேந்தர் "நெடுங்கழுத் தரித்த போதே
ஆசற இருந்தீர் இன்னும் அறைகுவம் மடிதல் வேண்டா
பூசுமின் இனிய நீற்றைப் போற்றுமின் ஈசன் தாளை
மாசற நீரும் நாமும் வாழலாங் கூடி" என்றார்.