பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 காட்டிய புத்தர்தம் துறவும் துணிவும் நூல் முழுதும் நன்கு போற்றப் பெறுகின்றன. பசி, பிணி, பகை என்ற மூன்றும் உலகினை நலிவு படுத்துவன. இவை நீங்கலன்றி உலகிற்கு உய்தி இல்லை என்பது உறுதி. இதை எண்ணியேதான் புத்தரும் தம் மனைவியையும் மகனையும் மன்னர் வாழ்க் கையும் விட்டுக் காடு நடந்தார். எனவே வாழ்வின் அடிப் படை நெறியான இந்த உண்மையை இணைத்து முதற் காதையை முடித்த சாத்தனர் இறுதியில், இதனினும் மேலாக, இவ்வுலக வாழ்விற்கெனத் தன்னையே ஒறுத்துத் தவநிலையில்-புத்தரைப் போன்றே நின்ற மணிமேகலையை நமக்குக் காட்டுகின்ருர். மணிமேகலையின் கதை முழுதும் மக்கள் வாழவேண்டிய சமுதாய வாழ்வின் அடிப்டை களைக் காட்டிய சாத்தனர், கடைசியில் உலகம் அந்நெறி பற்ருத காரணத்தால், மணிமேகலையினையே அந்நெறி வளர நோன்பினை மேற்கொள்ள வைக்கிருர். உலகில் தம் சொற்கேட்காத போதும் அறத்துக்கு மாறுபட்ட நிலை யிலும், அண்ணல் காந்தி அடிகள் நோன்பினை மேற் கொண்ட வாழ்க்கை நெறியினைக் கண்ட நமக்கு, இந் நெறி சாத்தனர் தம் பொன்னெறியே எனப் புலப்படு கின்றதன்ருே!. உலகம் அடிப்படை இன்னல்களாகிய மூன்றும் நீங்கிச் சிறந்து வாழ, வாழவைக்க முயன்ற மணி மேகலை, கடைசியில் தானே தன்னை ஒறுத்து, உலகம் பவத்திறம் அறுக’ என நோன்பு கொள்ள நேர்கின்றது. 'பவம்' என்ற சொல்லுக்குப் பிறப்பு, உலக வாழ்வு உலகம், பாவம் என்று பல பொருள்களும் திறம் என்ற சொல்லுக்குக் காரணம், கூறுபாடு, மிகுதி என்பன போன்ற பல பொருள்களும் உள்ளன. ஈண்டுள்ள சாத்தனர் கூற்று எல்லாப் பொருள்களையும் ஏற்கும் வகையில் அமை கின்றது. உலகம் இன்பில் திளைத்து வாழவே தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராக நின்ற மணிமேகலை உலகம் பவத்திறம் அறுக’ என நோற்ருள் என்பர் சாத்தனர்.